- 3 மாத கைக்குழந்தையுடன் நடிக்க வந்தவர் இந்த நடிகை. பின்னாளில் தனது கடின உழைப்பால் 3 முதல்வர்களுடன் நடித்துள்ளார். பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார்.
- தமிழ் சினிமாவின் பெருமை சௌகார் ஜானகி.
- 93-வது வயதான இவரது சினிமா வாழ்க்கை பயணம் பலரும் உத்வேகம் அளிக்க கூடியது.
- கடந்த 1931-ம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர் சௌகார் ஜானகி.
- 15 வயதில் ஆல் இந்தியா ரேடியோவில் அறிவிப்பாளராக பணியாற்றினார். அவரது குரலைக்கேட்டு பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் அவரை திரைப்படத்தில் நடிக்க அணுகியபோது அவரது குடும்பத்தார் மறுத்ததுடன், திருமணம் செய்துவைத்தனர்.
- குடும்ப வறுமை.. கை குழந்தையுடன் சினிமா கனவுகளை கண்களில் தாங்கி கொண்டு தயாரிப்பாளர் வீட்டை தட்டினார்.
- கைகுழந்தை இருக்கிறது. கல்யாணம் வேறு ஆகிவிட்டது. நடிக்க வாய்ப்பில்லை என்று மறுத்தார் அவர். பின்னர் அவரது தம்பி எடுக்கும் படத்தில் சௌகார் ஜானகியை பரிந்துரைத்தார்.
- தெலங்கானா முதல்வர் என்டிஆர் நடித்த ‘சௌகார்’ படத்தில் நடிகையாக அறிமுகமானார்
- இந்தப் படம் 1947-ம் ஆண்டு வெளியானது. அடுத்து அவரது சினிமா பயணம் டாப் கியருக்கு சென்றது.
- தமிழில் ஜெமினி நிறுவன படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை வழங்க காரணமாக இருந்தவர் காஸ்ட்யூம் மேனேஜராக இருந்து பின்னாளில் பிரபல நடிகராக மாறிய ஜெமினி கணேசன் தான்.
- மறைந்த முதல்வர் கருணாநிதி எழுத்தில் உருவான ‘குலக்கொழுந்து’ படத்தில் நடித்தார் சௌகார் ஜானகி.
- ஜெயலலிதா, எம்ஜிஆருடன் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுதவிர ஆந்திர முதல்வர் என்.டி.ஆருடன் நடித்துள்ளார்.
- இது தவிர்த்து, சிவாஜி, நாகேஸ்வரராவ், ராஜ்குமார், பிரேம் நசீர் உள்ளிட்ட அனைவருடனும் நடித்துள்ளார்.
- நடிகவேள் எம்.ஆர்.ராதாவுடன் குமுதம் படத்தில் நடித்துள்ளார்.
- தமிழில் ஜெமினி கணேசன், ஜெய்ஷங்கர், சிவகுமார், ரஜினி, கமல் என அனைத்து நடிகர்களுடன் நடித்தவர் என்கிற பெருமை இவருக்கு உண்டு
- தொடர்ந்து எதிர்நீச்சல், பாமாவிஜயம், ரஜினியின் தாயாராக தில்லு முல்லு, கமலுடன் சிறிய வயதாக இருக்கும்போதே பார்த்தால் பசி தீரூம் உள்ளிட்ட படங்கள் என 70 ஆண்டுகாலம் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
- தமிழகத்தில் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, என 3 முதல்வர்களுடன் கலைப்பயணத்தை தொடர்ந்தவர் சௌகார் ஜானகி.
- அவருக்கு 1968 ஆம் ஆண்டே கலைமாமணி விருது அண்ணா கையால் கிடைத்தது.
- அதன் பின்னர் இருகோடுகள் படத்திற்காக சிறந்த நடிகை விருது பெற்றார். தொடர்ந்து கலைமாமணி,விருது நந்தி விருது என பல விருதுகளை நடிப்புக்காக பெற்றுள்ளது
No comments:
Post a Comment