Wednesday, February 5, 2025

KING MAKER !

 


ஐம்பது வருடத்துக்கு முன் நடந்த சரித்திரம் தெறியாமல் வந்து விழுந்த கேள்வி !

KING MAKER !

இது தான் பெருந்தலைவரின் பட்டம் !

பழைய காங்கிரஸ் கட்சியில் ராஜாவை உருவாக்கும் இடத்தில் இருந்தவர் இந்த ஏழை பங்காளன் !

ராஜாவை நியமிப்பவர் யார் ?

மகாராஜா !

எளிமையான அந்த மகராசன் தான் மகாராஜா !

நேரு மறைந்த உடன் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி பிறந்தது !

மொரார்ஜி என்ற காந்தியவாதி / சாஸ்திரி என்ற மாமனிதர் / இந்திரா காந்தி ….இந்த பட்டியலில் காமராஜர் பெயர் இல்லை !

காரணம் ___

காமராஜர் பிரதமராக விரும்பினால் யாரும் போட்டியிட போவதில்லை என்ற அறிவிப்பு வந்தது !

"அன்ன போஸ்ட்" டாக வந்த பிரதமர் பதவியை வேண்டாம் என்று உதறிய தமிழ் மக்களின் தெய்வம் காமராசர் !

ஆனால், பிரதமரை தேர்வு செய்யும் பொறுப்பு காமராஜருக்கு வழங்கப்படடது!

அவர் தேர்ந்தெடுத்தது லால் பகதூர் சாஸ்திரி !

காலத்தின் கோலம் / மர்ம சதி / இயற்கையின் விளையாட்டு இதில் ஏதோ ஒன்றால்

சாஸ்திரி காலமானார் !

பிரதமரை தேர்வு செய்யும் பொறுப்பு மீண்டும் பெருதலைவருக்கு வந்தது !

இந்திராவை தேர்ந்தெடுத்தார் கிங் மேக்கர்!

காமராஜர் கொண்டு வந்த மற்றொரு மாபெரும் திட்டம் கே. பிளான் !

பதவியிலிருந்து வயதானவர்கள் தாமே முன் வந்து விலகி, இளைஞர்களை முன்னே கொண்டு வருவது தான் காமராஜ் பிளான் !

இதற்கு முன் மாதிரியாக, தாமே முதல்வர் பதவியை உதறி, பக்தவச்சலத்தை முதல்வராக்கினார் பெருந்தலைவர் !

காமராஜர், அகில இந்திய காங்கிரசின் அதிபர் !

காந்தியின் தொண்டன் !

தேச பக்தன் !

அவர் யாருக்கும் அடிமையில்லை!

ரஷ்யாவுக்கு பயணம் செய்த போது கூட அதே எளிமை !

தம்பி ஜாக்கிரதை ! திருசெந்தூர் பக்கம் போய் , இந்த கேள்வியை கேட்டு வைக்காதீங்க !

வதம் செய்து விடுவான் முருகன் !

"என்னான்னேன் ! நான் எழுதிய பதில் சரிதான்னேன் ? "

————————— P A R T 2 —————————

1965 ஆம் ஆண்டில், சீனாவின் தூண்டுதலால் பாகிஸ்தான், இந்தியா மீது போர் தொடுத்தது. ஒரு தடவை கோட்டை விட்டோம். இப்ப பதிலடி ! " வரவேற்றது இந்திய ராணுவம் !

தோற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான், கொரில்லா போர் முறையை கையாண்டது !

பஞ்சாப் மாநிலத்தின் விவசாய நிலத்தை துவம்சம் செய்தது !

பாசுமதி/ கோதுமை விளைச்சல் நிலம் கொழுந்துவிட்டு எரிந்தது !

ராணுவ வீரர்களுக்கு உற்சாகம் தர பெருந்தலைவர் அங்கே சென்றார் !

பிரதமர் சாஸ்திரி தடுத்தார் , " உங்கள் உயிர் எங்களுக்கு முக்கியம் "

"போர்களத்தில் என் உயிர் போவது எனக்கு பெருமை "

அப்போது தான் அவரை " காலா காந்தி " என்று கொண்டாடினார்கள்.

பிரதமரின் அன்பு கட்டளையை மீறினார் தலைவர் !

காமராஜர் ஆட்சி , தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்றது .

அவர் போட்ட பலமான அடித்தளத்தில் திராவிட கட்சிகள் பயணித்தது என்பதே உண்மை !

நெய்வேலி நிலக்கரி திட்டம் -

பாரத கன ரக தொழிற்சாலை

ஐ.சி.எஃப்

HVD

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை

இதெல்லாம் பெருந்தலைவர் ஆட்சி காலத்தில் வந்தது !

இப்படி ஒரு படம் கொடுக்க யாருக்கு தில்?

எளிமையாக வாழ்ந்தார் காமராஜர்

அடிமையாக இல்லை !

Saturday, January 11, 2025

உலகப் புகழ்பெற்ற போரின் "காட்சிகளை"

 உலகப் புகழ்பெற்ற போரின் "காட்சிகளை" விளக்கும் படங்கள்!மேலும்விரிவானதகவலுக்கு-விக்கிபீடியா.

நன்றி.

KING MAKER !

  ஐம்பது வருடத்துக்கு முன் நடந்த சரித்திரம் தெறியாமல் வந்து விழுந்த கேள்வி ! KING MAKER ! இது தான் பெருந்தலைவரின் பட்டம் ! பழைய காங்கிரஸ் கட...