Sunday, January 15, 2023

இதுவரையில் அதிக காலம் உயிர் வாழ்ந்தவர் யார்

 இதுவரையில் அதிக காலம் உயிர் வாழ்ந்தவர் யார்??

256 வயதான மனிதர் தனது மரணப்படுக்கையில் உலகிற்கு தெரிவித்த இரகசியங்கள்

உலகில் மிக நீண்ட காலம் வாழ்ந்த மனிதர் யார்? இவர் Li Ching Yuen, 256 ஆண்டுகளை இவ்வுலகில் நிறைவு செய்தவர். ஆம் இது ஒரு கட்டுக்கதையோ, கற்பனைக்கதையோ அல்ல.

1930 ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் இல் வெளியான கட்டுரைக்கு அமைவாக, Wu Chung-chieh எனும் Chengdu பல்கலைகழகத்தின் பேராசிரியர், இம்பீரியல் சீன அரசாங்க பதிவுகளை ஆராய்ந்ததில், 1827 ஆம் ஆண்டில் Li Ching Yuen இன் 150 ஆவது பிறந்த நாளையொட்டிய வாழ்த்து செய்திகளையும், பின்னர் 1877 ஆம் ஆண்டில் 200 ஆவது பிறந்ததின வாழ்த்துகளையும் கொண்ட ஆவணங்களை கண்டறிந்தார்.

1928 ஆம் ஆண்டில், நியூயார்க் டைம்ஸ் நிருபர் ஒருவர், Li இன் சுற்றுப்புறத்தில் உள்ள பல முதியவர்கள் தங்கள் தாத்தாக்கள் சிறுவர்களாக இருக்கும்போது அவரை அறிந்திருக்கிறார்கள் என்றும், அந்த நேரத்தில் அவர் ஒரு வளர்ந்த மனிதர் என்றும் வலியுறுத்தினார்.

Li Ching Yuen தனது 10 ஆவது வயதில் மூலிகை மருத்துவ தொழிலைத் தொடங்கினார். அவர் மலைத்தொடர்களில் மூலிகைகள் சேகரித்து, அவற்றின் நீண்ட ஆயுளுக்கான ஆற்றலைக் அறிந்து கொண்டார்.

ஏறக்குறைய 40 ஆண்டுகளாக, அவர் லிங்ஷி, கோஜி பெர்ரி, வைல்ட் ஜின்ஸெங், ஹீ ஷூ வு மற்றும் கோட்டு கொல (வல்லாரை) மற்றும் ரைஸ் ஒயின் போன்ற மூலிகை உணவுகளை உட்கொண்டு உயிர் வாழ்ந்தார்.

1749 இல், தனது 71 ஆவது வயதில், சீனப் படைகளில் தற்காப்புக் கலை ஆசிரியராக சேர்ந்த Li, அவரது சமூகத்தில் மிகவும் விரும்பப்பட்ட ஒரு விம்பமாக காணப்பட்டுள்ளார். இவர் 23 முறை திருமணம் செய்து கொண்டு 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

அவரது பிராந்தியத்தில் பொதுவாக அறியப்படும் கதைகளின்படி, Li தனது குழந்தைப் பராயத்திலேயே எழுதவும் படிக்கவும் அறிந்திருந்தார், மேலும் அவரது தனது பத்தாவது வயதினை அடையும் முன் Kansu, Shansi, Tibet, Annam, Siam and Manchuria ஆகிய நாடுகளிற்கு மூலிகைகள் சேகரிக்கப்பதற்காக பயணம் செய்துள்ளார்.

முதல் நூறு ஆண்டுகள் அவர் இந்த தொழிலில் தொடர்ந்தார். பின்னர் மற்றவர்கள் மூலம் சேகரிக்கப்பட்ட மூலிகைகள் விற்கும் தொழிலைச் செய்தார்.

அவர் லிங்ஷி, கோஜி பெர்ரி, காட்டு ஜின்ஸெங், ஹீ ஷூ வு மற்றும் கோட்டு கொல ஆகியவற்றுடன் வேறுபல சீன மூலிகைகளையும் விற்றார். அத்தோடு இந்த மூலிகைகள் மற்றும் அரிசி ஒயின் ஆகிவற்றை உணவாக உட்கொண்டு உயிர் வாழ்ந்தார்.

இவர் மட்டும் அல்ல :

Li இன் சீடர்களில் ஒருவரின் கூற்றுப்படி, அவர் ஒரு முறை 500 வயதான ஒருவரை சந்தித்திருந்தார், அவர் Qigong பயிற்சிகள் மற்றும் மனித இயலுலகிற்கு அப்பாற்பட்ட, ஆயுட்காலத்தை அதிகரிக்க கூடிய உணவு முறைகளை பரிந்துரை செய்துள்ளார்.

Qigong மற்றும் மூலிகை நிறைந்த உணவு முறைகள் தவிர, ஆயுள் நீட்டிப்பு தொடர்பாக இந்த வல்லுனரிடமிருந்து நாம் வேறு என்ன கற்றுக்கொள்ளலாம்?

Li தனது மரண படுக்கையில் பிரபலமாக கூறியதாவது, "நான் இந்த உலகில் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தேன்". அவரது இந்த அமைதியான கடைசி வார்த்தைகள், நீண்ட மற்றும் வளமான வாழ்க்கைக்கான மிகப்பெரிய ரகசியங்களில் ஒன்றை சூசகமாக நமக்கு அறியத்தருகின்றது.

மேற்குலகில், முதுமை என்பது உயர் தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் நவீன மருத்துவ முறைமைகளைக் கொண்டு வெல்லப்பட வேண்டிய ஒன்று எனத் தொடர்ச்சியாக நம்பவவைத்துக்கொண்டு இருக்கப்படுகின்றது.

நீண்ட ஆரோக்கியத்திற்கான அவரது ரகசியம்:

நீண்ட ஆயுளுக்கான ரகசியம் தொடர்பாக Li இடம் கேள்வி எழுப்பப்பட்ட பொழுது, கீழ்க்காண்பவை அவரது பதில்களாக காணப்பட்டது.

“இதயத்தை அமைதியாக வைத்திருங்கள், ஆமை போல உட்கார்ந்து, புறாவைப் போல உற்சாகமாக நடந்து, நாயைப் போல தூங்குங்கள்.” - மிக நீண்ட ஆயுளின் ரகசியத்தை அறிய Li ஐ தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற போர்வீரரான Wu Pei-fu இற்கு Li அளித்த அறிவுரைகள் இவை.

உள்ளார்ந்த மன அமைதியுடன் சுவாச பயிற்சி நுட்பங்களைக் கடைப்பிடித்தே வியக்கத்தக்க நீண்ட ஆயுளைப் பெற்றார் Li.

Li அவர்களது உணவு முறைகள் அவரது நீண்ட ஆயுளில் பெரும் பங்கை வகித்த போதிலும், இதுவரை ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றில் மிகவும் அதிக காலம் வாழ்ந்த ஒரு நபர், தனது நீண்ட ஆயுளை தனது மனநிலையுடனும் காரணப்படுத்துவது மிகவும் ஆச்சரியத்தைத் தருகின்றது.

இதை நம்புவதற்கு ஏன் கடினமானதாக உள்ளது?

மேற்கத்திய உலகின் சராசரி ஆயுட்காலம் தற்போது 70-85 வயதுக்கு இடைப்பட்டதாக இருப்பதால், 100 வயதுக்கு மேல் வாழ்தல் என்பது மிகவும் நீளமானது போல் தெரிகிறது.

அவ்வாறு இருக்கையில் 200 வயதுக்கு மேற்பட்டு வாழ்தல் என்பது மிகவும் சந்தேகத்திற்குரியதாகத் தெரிகிறது. ஆனால் மக்கள் இவ்வளவு காலம் வாழ முடியும் என்று நாங்கள் ஏன் நம்பவில்லை?

இந்த உலகில் சிலர், கடினமான 9-5 வாழ்க்கை முறையை வாழவில்லை, அவர்கள் கடனின் அழுத்தங்களைச் சமாளிக்க வேண்டியதில்லை, மாசுபட்ட நகரக் காற்றை சுவாசிக்கவில்லை, அவர்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அவர்கள் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள் அல்லது மாவு அல்லது பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட எந்த உணவுகளையும் சாப்பிடுவதில்லை. அத்தோடு அவர்கள் அமெரிக்க உணவு நியமங்களில் இருந்து விலகி இருப்பார்கள்.

அவர்கள் கொழுப்பு நிறைந்த இறைச்சிகள், இனிப்புப் பண்டங்கள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட உணவுகளை சாப்பிடுவதில்லை. நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இல்லை, ஆல்கஹால் இல்லை, புகையிலை இல்லை.

அவர்களின் உணவுகளில் நாம் அடிக்கடி நாடும் ஊட்டச்சத்து குறைந்த துரித உணவு வகைகளை விலக்குவது மட்டுமல்லாமல், நமது உறுப்புகளுக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கும் வலு சேர்க்கக்கூடிய சிறப்பு உணவு வகைகள் மற்றும் மூலிகைகளை உட்கொள்கின்றனர்

அவர்கள் தங்களுடைய மேலதிக நேரங்களை இயற்கையுடன் செலவிடுகிறார்கள், சுவாச பயிற்சியை மேற்கொண்டு தியானிக்கிறார்கள். இவை யாவும் உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் எல்லாவற்றையும் எளிமையாக வைத்திருக்கின்றார்கள், சரியான தூக்கத்தைப் பெறுகின்றார்கள், மேலும் சூரியனின் கீழ் இயற்கையில் அதிக நேரம் செலவிடுகின்றனர். வெயிலில் ஓய்வெடுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது, ​​உடனடியாக புத்துணர்ச்சி அடைவதை உணர்கிறோம், இதை "விடுமுறை" என்று அழைக்கிறோம்.

ஒரு வாழ்நாள் முழுவதும் மலைகளில் அதைச் சரியான மன, ஆன்மீக மற்றும் உடல் நலத்துடன் செய்வதை கற்பனை செய்து பாருங்கள்.

நாம் செய்யவேண்டியவை என்று நாம் அனைவரும் அறிந்த காரியங்களைச் செய்தால், 100 வயது வரை வாழ்வது என்பது பொதுவானதாக ஆகிவிடும் என்பதில் துளி சந்தேகம் கூட இல்லை. நாம் நம் உடலை சரியாக உபசரிக்கும் போது, ​​நாம் எவ்வளவு காலம் வாழ முடியும் என்று யாருக்குத் தெரியும்?

மொழிபெயர்க்கப்பட்டது

நன்றி - மயூரநாதன்

No comments:

Post a Comment

KING MAKER !

  ஐம்பது வருடத்துக்கு முன் நடந்த சரித்திரம் தெறியாமல் வந்து விழுந்த கேள்வி ! KING MAKER ! இது தான் பெருந்தலைவரின் பட்டம் ! பழைய காங்கிரஸ் கட...