Thursday, April 20, 2023

காக்கா

 

.

.அதென்ன காகத்துக்கு மட்டும் சாப்பாடு போட கூப்பிடுகிறார்கள், மற்ற பறவைகளெல்லாம் என்ன பாவம் பண்ணியது?

.

காகம் சேர்ந்து வாழும்

உணவு கிடைத்தால் தன் இனத்துடன் பகிரும்

பெரும்பாலும் மற்ற பறவைகள் போல உணவுக்காக சண்டையிடாது.

.

.

.

இறந்த பிராணிகளை உண்டு சுத்தம் செய்துவிடும்.

நீரை கண்டால் தினம் ஒருமுறையாவது குளித்து விடும்.

முக்கியமான ஒன்று.மற்றபறவைகள் போல அழகாக இருக்கின்றதே என்று மனிதர்கள் யாரும் வலை விரித்து பிடிக்கமாட்டார்கள் அதனால் பயமின்றி பக்கத்தில் வரும்.


.

எத்தி திருடும் அந்த காகம் என்று பாரதியராலும்,

கல்லை போட்டு நீர் மேலே வந்ததும் குடித்தது என்று அறிவு பற்றியும் சிறு வயதிலேயே பாடப்புத்தகத்தில் வைத்ததாலும்.

இந்து மதத்தில் சனீஸ்வரன் வாகனம் என்று நம்பப்படுவதாலும் கூட காகத்துக்கு உணவளிக்கின்றார்கள்.


ஒரு காகத்தை கயிறு போட்டு கட்டி இந்த நம்பிக்கையை காசாக்கும் ஆள்களும் உண்டு.

கா …கா …ன்னு கத்தி கூப்பிடாமே ஒரு காக்கா ஒரு இலையில் சாப்பிடுறதுக்கு 50 ரூபாய் !!

செமை வருமானம்.

பேரூர் ,பட்டிஸ்வரத்திலும் இப்போ கொண்டுவந்துட்டாங்க !!

.

.

சுவீடனில் புகைத்து கீழே எறிந்த சிகரெட் துண்டுகளை சேகரிக்கவும் கூட காகங்களை பயன்படுத்துகின்றார்கள்.

இப்படி மனிதர்களுக்கு இணக்கமாக பிராணிகளில் நாய்கள் இருப்பது போல

பறவையினங்களில் காகம் இருப்பதால் அதற்கு முன்னுரிமையாக இருக்கலாம்.


No comments:

Post a Comment

mahalashmi

ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்துதி 25-12-1994 அன்று ஸ்ரீரங்கத்தில் நடை பெற்ற ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவத்தில் வெளியிடப்பட்டது. ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்துதி 1. ச...