ராஷ்டிரிய சுயம் சேவாக் சங்கம் உண்மையிலேயே தமிழர் கூறுவது போல் பயங்கரமான இயக்கமா, ஆங்கில Quora-வும், வட இந்தியரும் நல்லதெனவும், கூடாதென்பது தவறென்றும் கூறுகிறார்களே?
- நானும் ஆர். எஸ். எஸ் எனும் பயங்காவாத இயக்கத்தில் இருந்தேன். அவர்களின் நோக்கம் இந்திய ஒருமைப்பாட்டினை மனதில் உருவாக்குவது. இது உண்மையிலேயே பயங்கரவாதச் செயலாகும்.
- மேலும் ஒவ்வொரு நாளும் நாட்டுப்பற்று தொடர்பான கதைகளைச் சொல்லி மனதினுள் நாட்டுப்பற்றினை உருவாக்கினர், மிகமிக பயங்கரவாதச் செயலாக இதைக் கருதலாம்.
- ஒரு நாள் சிலம்பம், மற்றொருநாள் கபடி இன்னுமொருநாள் கராத்தே எனும் தற்காப்புக் கலைகளைச் சொல்லிக் கொடுத்தனர். சொல்லிக் கொடுத்தது மட்டுமல்லாமல் நாட்டினைக் காக்க இவற்றைத் தெரிந்திருப்பது நல்லது எனவும் போதித்தனர். எவ்வளவு தைரியம் இருந்தால் இப்படி ஒரு பயங்கரவாதச் செயலை செய்வார்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள்.
- மேலும் அங்கே இணைந்ததும் என்ன சாதி எனக் கேட்பார்கள் என நினைத்தேன். கொடுமை என்னவெனில் என்ன மதம் எனக் கூட கேட்கவில்லை. இது உண்மையிலேயே பயங்கரவாதச் செயல் அல்லவா?
- யோகா, உடற்பயிற்சி, தியானம் என சொல்லிக் கொடுத்தாத்கள் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்.
- அது மட்டுமல்ல நாட்டில் இயற்கை இடர்பாடுகள் ஏதேனும் ஏற்பட்டால் மக்களுக்கு உதவத் தயாராக இருக்க வேண்டுமாம். இம்மாதிரி சிந்தனை அமைப்புள்ள ஆர்.எஸ்.எஸ் உண்மையிலேயே தடை செய்யப்பட வேண்டிய ஒன்றுதான்.
ஆர்.எஸ்.எஸ் ஸில் என்னுடைய சங்க வயது 26 ஆண்டுகள்.
கீழே ஆர்.எஸ்.எஸ் நிகழ்த்திய சில பயங்கரவாதச் செயல்கள்.
நாகப்பட்டினத்தில் சுனாமியின் போது மீட்பு நடவடிக்கையில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்.
பாட்னா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை பத்திரமாக மீட்டு உணவும் அளித்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்.
சென்னை வெள்ளத்தின் போது மக்களுக்கு உணவு அளித்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்.
சென்னை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு அனுப்பிய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்.
கர்நாடகாவில் ஏற்பட்ட ரயில் விபத்து மீட்புப் பணியில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள். அதுமட்டுமல்லாது ரத்ததானமும் செய்திருக்கின்றனர் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்.
ஆந்திராவில் கொரோனா ஊரடங்கின் போது உணவு வழங்கிய ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள்.
கேரள வெள்ள மீட்ட்புப்பணியில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி.
கொல்கத்தா விபத்து மீட்புப் பணியில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேளர மக்களுக்கு உதவ ராஜஸ்தானில் உணவுப் பொருட்கள் சேகரிக்கும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்.
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்.
ஊரடங்கின்போது இஸ்லாமியர்களுக்கு உணவு வழங்கிய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்.
No comments:
Post a Comment