Tuesday, October 24, 2023

பிரதம மந்திரி விவசாயிகள் சொட்டு நீர் பாசன திட்டம்

 உங்களுக்கு BJP பிடிக்கிறதோ இல்லையோ மத்திய அரசின் இந்த திட்டம் நமது நாட்டிற்கு முக்கியமாக தமிழ்நாட்டிற்கு மிகவும் நல்ல திட்டம் .இந்த திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டது .இப்போது கடந்த 6 வருடங்களாக BJP நிறைய நிதி ஒதுக்கி சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறது .

திட்டத்தின் பெயர் :பிரதம மந்திரி விவசாயிகள் சொட்டு நீர் பாசன திட்டம்

திட்டத்தின் நோக்கம் :விவசாயிகள் இடையே மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப சொட்டு நீர் பாசனத்தை பிரபலப்படுத்துவது .

என்ன தேவை இந்த திட்டத்திற்கு :

  • பொதுவாக நமது நாட்டில் விவசாயம் "கால்வாய் பாசனம் "முறையில் செய்யப்படுகிறது .இதனை ஆங்கிலத்தில் flood irrigation என்று சொல்லுவர் .
  • நெல் போன்ற பயிர்களுக்கு இது சரியான உக்தி ஆகும் .ஆதி காலத்தில் இருந்தே இந்த முறை தான் உள்ளது .
  • ஆனால் அனைத்து விதமான பயிர்களுக்கு இந்த முறை தேவை அற்றது .இதனால் தண்ணீர் நிறைய வீணாவுதுடன்,உரங்களும் தண்ணீருடன் வீணாகிறது .
  • சொட்டு நீர் பாசனம் செய்வதற்கு குறைந்த அளவு நீர் போதும் .
  • மழை குறைந்த இடங்களில் இந்த பாசனம் மிகவும் உதவும் .இதனை விவசாயிகளிடத்தில் கொண்டு செல்லும் நோக்கமே இந்த திட்டமாகும் .

திட்டம் விவரம் :

  • இரண்டு ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 100%மானியத்தில் தூவான் ,தெளிப்பான் போன்ற கருவிகள் கொடுக்கப்படுகின்றது .
  • இரண்டு ஏக்கர் மேலே நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 75%மானியத்தில் தூவான் ,தெளிப்பான் போன்ற கருவிகள் கொடுக்கப்படுகின்றது .

(இந்த கருவிகளின் மதிப்பு சுமார் 50000 ருபாய் முதல் 1 லட்சம் வரை )

தமிழ்நாட்டில் இந்த திட்டம் :

  • கடந்த 6 வருடங்களில் சுமார் 2.5 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் 2500 கோடி ரூபாய் செலவில் இந்த கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளன .
  • சுமார் 10 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் தமிழ்நாட்டில் மட்டும் சொட்டு நீர் பாசனம் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது .

என்ன பயன் விவசாயிகளுக்கு :

1. உர செலவு குறைவதால் லாபம் கூடுகிறது /நஷ்டம் குறைகிறது

2. தேவையான இடத்தில மட்டும் நீர் பாய்வதால் களைகள் முளைப்பதில்லை .அதை நீக்குவதற்கு உரிய நேரம் /பணம் மிச்சம் .

3. குறைந்த அளவே தண்ணீரை பயன் படுத்துவதால் நிலத்தடி நீர் காக்கப்படுகிறது

4. மின்சாரம் சேமிக்கப்படுகிறது .

5.பருவ மழை பொய்த்தாலோ /குறைந்தாலோ விரக்தி ஆகி விடாமல் ,சொட்டு நீர் பாசனம் மூலம் என்ன விளைவிக்க முடியுமோ அதை விளைவித்து விவசாயி லாபம் பாக்கலாம் .

அரசின் நோக்கம் :

  • இன்னும் 5 ஆண்டுகளில் 20 லட்சம் ஏக்கருக்கு இந்த சொட்டு நீர் பாசனத்தை விரிவு படுத்த வேண்டும்.
  • ஒரு கிராமத்தில் குறைந்தது 25 ஏக்கராவது சொட்டு நீர் பாசனம் செய்ய வேண்டும்
  • இன்னும் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் .

ஒரு விவசாயின் குடும்பத்தில் 4 நபர்கள் என்று வைத்து கொண்டால் சுமார் 2.5 லட்சம் x 4 =10 லட்சம் தமிழர்கள் இந்த திட்டத்தின் மூலம் கடந்த 6 வருடங்களில் பயன் பெற்று உள்ளனர்

முடிவாக

மோடியை தமிழர்கள் இன்னும் புரிந்து கொள்ள வில்லை .

புரிந்து கொண்டால் கைவிடமாட்டார்கள்

புரிந்து கொள்ள விடாமல் செய்ய அரசியல் சக்திகள் ,மத மாற்றும் ப்ரோக்கர்கள் இன்னும் பலர் உள்ளனர் .

அரசியல் வெற்றி என்பது எளிது அன்று

இனிமேல் மோடி என்ன செஞ்சான் தமிழ்நாட்டிற்கு என்றால் இந்த சொட்டு நீர் பாசனம் திட்டம் பற்றி நன்றாக விளக்குங்கள்.

இன்னும் பல திட்டங்கள் உள்ளது .

நன்றி.

Pradhan Mantri Krishi Sinchayee Yojana

HORTICULTURE

No comments:

Post a Comment

KING MAKER !

  ஐம்பது வருடத்துக்கு முன் நடந்த சரித்திரம் தெறியாமல் வந்து விழுந்த கேள்வி ! KING MAKER ! இது தான் பெருந்தலைவரின் பட்டம் ! பழைய காங்கிரஸ் கட...