Thursday, January 4, 2024

தி.மு.க எப்போதும் பிராமணரை குறிவைப்பது ஏன்

 தி.மு.க எப்போதும் பிராமணரை குறிவைப்பது ஏன்? அவர்களை குறிவைத்து என்ன பயன்? தி.மு.க-வுக்கு என்ன செய்தார்கள்?

திமுகவால் நாயக்கர் சமுதாயத்தை குறிவைக்க முடியுமா?

இல்லை கவுண்டர் சமுதாயத்தை குறிவைக்க இயலுமா?

இல்லை வன்னியர் சமுதாயத்தை குறிவைக்க இயலுமா?

இல்லை தேவர் சமுதாயத்தை ததான் குறி வைக்க முடியுமா?

அட அது கூட வேண்டாம் நாடார், செட்டியார், தேவேந்திரர், அருந்ததியர், பறையர் சமுதாயத்தைத்தான் குறிவைக்க இயலுமா?

மேற்கூறிய சமுதாயத்தினர் அனைவரும் ஒரு அடி அடித்தால் பலமடங்கு அடியை வட்டியை முதலுமாக திருப்பி தரும் ரகம். ஆக நாம அடிக்க வேண்டும் ஆனால் அடிவாங்கியவன் ஒரு போதும் திருப்பி அடிக்க கூடாது. வடிவேலு காமெடியை போல அடித்து விளையாட ஒரு புள்ளப்பூச்சி தேவை. அவர்களுக்கு எளிதான இலக்காக இருந்தது கோவில் பூஜாரிகளும் அப்பாவி பிராணமர்களும்தான். இதை தொடங்கி வைத்தது திமுகவின் முன்னோடியான திராவிட இயக்கம்தான்.

அப்புறம் என்ன சிறந்த அடிமை கிடைத்துவிட்டால் அவனை அடித்து பெரிய சாம்பியன் ஆகவேண்டும் என்ற நினைப்பில் மூர்க்கமாக விளையாட தொடங்கினார் ஈவேரா. நாட்டில் உள்ள அத்தனை பிரச்சினைகளுக்கும் பார்ப்பனன்தான் காரணம் என்று பழியை அவர்கள் மீது போட்டுவிட்டு அதிலிருந்து மக்களை காப்பாற்ற போகிறோம் என்று பீலா உட தொடங்கினார்கள். இவ்வாறாக அப்பாவிகளை அடித்து பெரிய ஆளான காரணத்தினலோ என்னவோ ஈவேராவை பெரியார் என கொண்டாடுகிறார்கள் போலும்.

அறுபது எழுபது வருடங்களாக இவர்கள் காட்டும் கொரலி வித்தையில் மூழ்கி கிடந்த மக்கள் தற்போது குடிக்கு அடிமையாகி போனார்கள். அதுதாம்லே திராவிடம். உனது கவனத்தை திசைதிருப்பி நைசாக உனக்கு ஊற்றி கொடுத்து குடிகாரன் ஆக்கிவிட்டார்கள்.

தற்போது கல்வி அவர்கள் வசம்,

மருத்துவமனைகள் அவர்கள் வசம்,

தொழில் துறை அவர்கள் வசம்,

மீடியாக்கள் அவர்கள் வசம்.

ரியல் எஸ்டேட் துறை அவர்கள் வசம்,

கிராமங்கள் தொடங்கி மாநகராட்சி வரை அவர்களின் கொடிதான் பறக்கிறது.

அதிகாரத்தின் உச்சத்தில் திராவிட இயக்கம் தற்போது இருந்து வருகிறது.

இந்த உயரத்திற்கு அவர்கள் போட்ட முதலீடு பிராமண வெறுப்பு மட்டுமே. பிராமணர்கள்தான் தங்களுக்கு நேர்ந்த அனைத்து கஷ்டங்களுக்கும் காரணம் என்ற நம்பிய அப்பாவி ஆட்டுமந்தை கூட்டம் இன்று குடிக்கு அடிமையாகி வருடந்தோறும் 50000 கோடிகளை குடித்தே அழிக்கிறது.

Lkg படிக்க 50000 , 12 வது படிக்க 2 லட்சம், மருத்துவம் படிக்க ஒரு கோடி, வைத்தியம் பார்க்க லட்சக்கணக்கான ரூபாய் என உங்களிடம் இருந்து அவன் பிடுங்கி கொண்டே இருக்கிறான். மனதில் கை வைத்து சொல்லுங்கள் தற்போது நடந்துவரும் இந்த சுரண்டலுக்கும் பிராமணர்களுக்கும் என்ன சம்பந்தம்?

பிராமணர்களை அடித்து விரட்டினோம் என்று திராவிட இயக்கத்தினர் மார்தட்டி கொள்கிறார்கள் ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

பிராமணர்களை நீங்கள் தமிழகத்தை விட்டு விரட்டி இருக்கலாம் ஆனால் அறிவுத்தளத்தில் இருந்து ஒருபோதும் உங்களால் அவனை விரட்டி அடிக்கவே முடியாது. கூகுள் தொடங்கி மைக்ரோசாப்ட் வரையிலான கார்ப்பரேட் கம்பெனிகளில் பிராமணர்தான் உச்சபட்ச பதவியில் அமர்ந்து இருக்கிறார்கள். அவ்வளவு ஏன் இந்தியாரை இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேல் ஆண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இன்றைய பிரதமர் கூட ஒரு பிராமணர்தான்.

ஆனால் பிராமணர்களை விரட்டி அடித்த திமுகவோ அறிவுத்தளத்தில் சூனியமாக நிற்கிறது. அதனால்தான் பீகார் பிராமணன் பிரசாந்த் கிஷோரின் காலில் விழுந்து அழைத்து வந்து கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டி கொடுத்து அவனது தயவில் ஆட்சியை பிடித்தது. எந்த பிராமணனை எதிர்த்து திராவிட இயக்கம் தொடங்கப்பட்டதோ அந்த பிரமாணன் தயவு இருந்தால்தான் ஆட்சியை பிடிக்க முடியும் என அவர்களை நம்ப வைத்ததுதான் கர்மா.

யார் உன்னை ஓட ஓட விரட்டினார்களோ அவர்களால் நிராகரிக்க முடியாத இடத்தில் அமர்வதுதான் சாதனை. இப்போது கூறுங்கள் இந்த போரில் வென்றவர் பிராமணர்களா இல்லை திராவிட இயக்கமா?

Images :- Google.

No comments:

Post a Comment

KING MAKER !

  ஐம்பது வருடத்துக்கு முன் நடந்த சரித்திரம் தெறியாமல் வந்து விழுந்த கேள்வி ! KING MAKER ! இது தான் பெருந்தலைவரின் பட்டம் ! பழைய காங்கிரஸ் கட...