Saturday, January 20, 2024

சிவலிங்கத்தின் வரலாறு

 சிவலிங்கத்தின் வரலாறு


நான் திடமாக நம்புவது இதோ:

நாம் எங்கும் காணும் சிவலிங்க உருவம் நம் முன்னோர்கள் ஞானிகள் ,வழிபாடு செய்வதற்கு உருவாக்கப்பட்டவை. கரும் கல்லில் ,பச்சை மரகத கல்லில், பளிங்கு, மரம், இரத்தினக்கல்லில் வடிவமைக்க பட்டுள்ளன.

கஜுரஹோ குகையில் அன்று.

கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று.

ஸ்படிக லிங்கம்

உண்மையில் சிவலிங்கம் என்பது

" உருவாய்அருவாய்,

உளதாய், இலதாய், அடியும் காணா, முடியும் காணா,

அணுவுக்கு அணுவாய் ,அப்பாலுக்கு அப்பாலாய்.

'சத்ததினுள்ளே ' சதாசிவம் ஆக, சித்தத்தின் உள்ளே சிவலிங்கமாக உள்ளது.

Simple ஆ சொன்னா, நம்ம சொந்த கண்ணால் பாக்க முடியாது, மனதால் மட்டுமே உணர முடியும், அதுவும் நம்பினாருக்கு மட்டுமே.

புரியவைக்க என்னால் ஆன முயற்சி மட்டுமே. நான் அறிந்த மட்டில் இந்த இல குவான விளக்கம் எங்கும் காணவில்லை

சிவலிங்கம் பற்றி விவரிக்க, நாம் தெரிய வேண்டியது, கைலாயம், இமயம், பால் வெளி, முக்கியமாக *கருந்துளை* Black hole theory. உருவம் அருவம் முதலியன. கடினமான விடயம்.

இந்த நாட்டில் மட்டும் அல்ல, இப்புவி முழுவதும் வரலாற்று காலத்துக்கு முன்பே, நிலப்பரப்பு துண்டு துண்டாக பிரியுமுன் ஒரே பெரும்கண்டமாக இருந்த காலம் முதல் மக்கள் இறை உருவாக வணங்கி வந்தது இந்த சிவலிங்க உரு மட்டுமே.சிவலிங்க உருவம் உலகின் எல்லா பகுதிகளிலும இருந்திருக்கிறது. ஃபிஜி தீவில், வாடிகனில், மெக்காவில் ஹவாய் தீவிலும் ,துறுக்கியிலும் கூட உள்ளது. கீழை நாடுகளில் ஏராளம் ..

நாம் காணும், இன்று வழிபடும், சிவலிங்கம் என்பது ஒன்றின் மாதிரி மட்டுமே. எதன் மாதிரி என்று கேட்டால்?

  1. இந்திய கண்டத்தின் நேர் வடக்கே, காஸ்மீரம் என்று அழைக்கப்பெறும் காஷ்யப் நாட்டுக்கு வடக்கே, இமயம் என்ற பெரும் மலை தொடரின் நாயகமாக, இன்று சீனா தன் குடைக்குள் வலுக் கட்டாயமாக கொண்டு வந்த திபெத்திய பெருவெளியில், மானசரோவர் குளம் அருகில், பனி படர்ந்த மலையின் சிகரமாக, மூன்று முகம் கொண்ட பனி மூடிய வெள்ளி கூம்பு.

பனி உருகி அபூர்வமாக தெரியும் முழு கைலாய மலையும் நாம் எங்கும் காணும் சிவலிங்கம் (அண்டம் போன்ற கருப்பான கல்லும் அது அமர்ந்துள்ள ஆவுடையார் எனும் அடி பகுதி) போன்று இருக்கும்.

கைலாய மலை மேல் ஏற யாருக்கும் அனுமதி கிடையாது, விமானம் பறக்க கூட, ஆகவே மலையின் முழு உருவத்தையும் பார்த்தோர் யாரும் இன்று இல்லை.

நேபாளத்தில் பனி இல்லா பொழுதில் என்றோ யாரோ எடுத்த படம் ஒன்று உள்ளது. அதை தேடிப்போய் வாங்கினேன். பல நதிகள் இங்கிருந்து தான் உருவாகிறது. நான் கண்டது பிரம்மபுத்திரா, கங்கை, சிந்து, சட்லேட்ஸ்,

அதையும் பதிவேற்றுகிறேன்.

இந்த கேள்வி:

" சிவலிங்கத்தின் உண்மையான அர்த்தம்"

என்ன என்பதை எனக்கு தெரிந்த வரை விளக்க முயல்கிறேன்.

நம்புவதும் , ஏற்று கொள்வதும் அவரவர் விருப்பம். எதிர் மறை கருத்தை தவிர்ப்பது நலம். ஒத்த, விட்டு போன கருத்துகளுக்கு வரவேற்பு உறுதி.

இன்று மேலை நாட்டு மேதைகள் புதிதாக கண்டு பிடித்த *BLACK HOLE* *கருந்துளை* தான் சிவலிங்கம்.

பிரபஞ்சம் எங்கும் நீக்கமற வியாபித்து இருக்கும் "ஓம் ஓம் ஓம் " என்ற ஒலி கருந்துளை சுழற்சி எழுப்பும் சப்தம். வெகு மிகு மின் காந்த அடர்த்தி சுழல் தான் கருந்துளை. ஆக்கும் அழிக்கும் சக்தி தான். கோள்கள் நட்சத்திரங்கள், எண்ணில் அடஙகா தாரகை கூட்டம் உள்ளிருந்து வெளிவரும், காலம் முடிந்த பின் உள்ளே இழுத்துக் கொள்ளப்படும் செயலும் இங்குதான் நடக்கிறது. ஓம் என்ற ஒலி நிரந்தரம், ஒரு நொடியும் ஓயாது. கோள்கள் உள், வெளி செல்கையில் கேட்கும் சத்தம் "அர ஹரோ ஹரா". அண்ட பெருவெளி ன் முழு தோற்றம் தான் நெருப்பு . அருட் பெறும் ஜோதி.

நாமும் தினம் ஜோதி வழிபாட்டில் இந்த இரண்டு ஒலிகளையும் கூவுகிரோம்.

ஹர ஹர ஹர மகாதேவா!

சக்கர நாற்காலியில் அமர்ந்து, சகல நாடியும் ஒடுங்கி, தொலை தூர கண்நோக்கியால் கண்ட தாக ஒரு மேலை நாட்டு விஞ்ஞானி சொன்னால் ஆமாம் போடும் நிலையில் நம் நாட்டு முனிவர், ஞாநிகள் உணர்ந்ததை ஒப்பு கொள்ள மாட்டார்களா என்ன?.. என்ன நான் சொல்றது!

No comments:

Post a Comment

KING MAKER !

  ஐம்பது வருடத்துக்கு முன் நடந்த சரித்திரம் தெறியாமல் வந்து விழுந்த கேள்வி ! KING MAKER ! இது தான் பெருந்தலைவரின் பட்டம் ! பழைய காங்கிரஸ் கட...