.
சனாதனம் …தமிழ் மொழி சொல்லா, வட மொழி சொல்லா? இன்று அகில மகா விவாதமே நடக்கிறது.
அதேபோல்;
அக்கிரஹாரம்/அக்கிர காரம் என்பது…
தமிழ் சொல்லா?,
சமஸ்கிருத சொல்லா?,
ஆனால் தவறாக அறியப்பட்ட சொல். பிரித்து மேய்ந்து பார்த்து விடலாமா?
"அக்கிரகாரம்" என்பது ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் வசிக்கும் இடம் என்று தவறாக அறியப்படுகிறது.
.
தமிழ் சொல் அல்ல. ஆனாலும், சொல் பிரித்து விளக்கம் கொடுக்க இயலும்.
அநேகமாக மறந்து போன சொல்லை இரவெல்லாம் நினைவுபடுத்தி இந்த கருத்து பதிவு செய்கிறேன்.
நெல்லை பகுதியில் பெண்கள் தண்ணீர் குடம் சுமக்க, குழந்தை யய் சுமக்க பயன் படும் ஒரு பக்க இடுப்பு 'ஒக்கல் ' என அழைப்பர். குடத்தை ஒக்கல் வை, குழந்தையை ஒக்கலில் தூக்கு என்பது வழக்கம்.
ஒக்கல் என்றால் ஒரு பக்கம், அக்குள் என்றால் இரு பக்கமும். என்ன நான் சொல்றது.
.
சொல் பிரித்து விளக்கம் இதோ :
அக்கி…= இரண்டு பக்கமும்
உதா…..அக்குள் ( அல்குல் அல்ல)
கிரகம்..= இல்லம். கோள்.
உதா……. கிரக பிரவேசம்
ஹாரம்….. மாலை
உதா……. மணியாரம்
(நல் மணியாரம் படைத்த தமிழ் நாடு)
.
ஊரின் நடுவில், உள்ள ஆலயத்தின் இரு புறம் அமைந்துள்ள குடியிருப்புக்கள் என்று கொள்ள வேண்டும்.
போதுமா ?
இன்னும் வேண்டுமா?
தமிழ்நாட்டில் கணபதி அக்ரஹாரம் என்று ஒரு ஊரே உள்ளது. சென்னையில் சில அக்ரகார தெருக்கள் இன்றும் உள்ளன. அநேகமாக பெயர் மாற்றி விட்டனர்.
ஆனாலும், தமிழ்நாட்டை விட கர்நாடகா, ஆந்திரா பகுதிகளில் இன்றும் ஏராளமான அக்ரகார தெருக்கள் பெயர் இருக்கின்றன.
மிகவும் புகழ் பெற்றது
பரப்பன அக்ரஹாரம், புகழ் பெற்ற சிறை இருக்கும் இடம் தமிழ் நாட்டிலும் புகழ் பெற்று விட்டது.
.
அக்கிரகாரம் என்ரோ சொல் மறந்து இன்று
சிவன் சன்னதி தெரு,
அம்மன் கோவில் சந்து
கிழக்கு ரத வீதி என்ரும் அழைக்கப்படுகிறது.
.
இங்கு குடி இருப்பவர்கள் அநேகமாக கோவிலை சார்ந்தவர்களாக இருப்பர்.
நந்தவனம் உண்டு, கோசாலை இருக்கும்.
ஆதினகர்த்தர்கள், மடாதிபதிகள் இருப்பர்.
கோவில் மேலாளர்கள், பொக்கிசதாரர்கள்,
மணியக்காரர்
பண்டார சந்நிதிகள்
வேதிகர்கள், சிவாச்சாரியார்கள் பட்டாச்சரியர்கள் ஓதுவார்கள்
பரிசாரர்கள்
அலங்காரர்கள்
சந்தனம் விபூதி தயார் செய்பவர். பூ பரிப்பவர், மாலை தோடுப்போர் .
இசை வாணர்கள்
நாயனகாரர்கள் மேளக்காரர்கள்
பல்லக்கு தூக்கிகள்
காவலர்கள், சுத்தம் செய்பவர்கள்.
இவர்களில் ஒரு சிலரே நீங்கள் சுட்டும் பிராமணர் சமூகம் சார்ந்தவர்கள்.
ஏனைய சமூகத்தினர் தாம் அதிகம் பேர். இறை உணர்வு உள்ளவர், எல்லோரும் மேன் மக்களே.
சாதி பேதம் பார்க்காமல் அவரவர் கடமையை கண்ணியத்துடன் செய்து வந்தனர்.
பிசி, ஓசி, ஸ்சி ஸ்ட் என்ற சொற்களை ஊக்க படுத்துவதில்லை. அது அரசியல். அறியாமை எல்லாவற்றையும் அரசியல் ஆக்குகிறது.
நம் முன்னோர்கள் காட்டிய நல் வழி…. படி.. இதை படி..
கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம். என்ற சொல் படி அரசர்கள் ஆலயம் சார் குடும்பம் வாழ இடம் கொடுத்தனர். சமீப காலங்களில் LIC colony, SBI colony, CMDA colony, secretariat housing போன்றவை மாதிரி
.
.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.
நாம் மறந்து விட்டோமா?,
கால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டதா?
அன்னியர் ஆதிக்கத்தில் அடிமை தனமா?
எம் மதமும் சம்மதம் என்ற பெரும் கூற்று காரணமா?
.
இல்லை பின்பு தோன்றி மக்களை மடை மாற்றிய புரட்சி அரசியல் வாதிகளா?
.
காலத்தின் கோலம்… விவேகமற்ற வேகம்…
.
இன்றும் கெட்டு போகவில்லை. விடியும்.
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
( கேள்வி கேட்டு தூண்டி விட்ட அன்பர் குமார் காளி அண்ணன் நுக்கு கோடானுகோடி புண்ணியம்)
ஏன் என்றால்.
சிவ ராத்திரில் மஞ்சத்தில் ஓய்வெடுக்காமல் கண் துஞ்சாரக வைத்தது நேற்று கண்ணில் பட்ட இந்த கேள்வி அல்லவா.