உருப்படியா ஒண்ணு சொல்லுவோம்!
வெள்ளத்தனைய மலர் நீட்டம்!
சென்னை மக்களுக்கு மட்டுமல்ல!மழைக்கு சிக்கி காரை மூழ்கவிட்டு காப்பாத்த வழியில்லாம கண்கலங்குற எல்லோருக்கும் இது கண்டிப்பா உதவும்.
கார் ,அகலம் ,நீளம் அளந்துக்கோங்க.அகலத்துக்கு கொஞ்சம் அதிகமா இருக்குறமாதிரி நீளம் ,மற்றும் தரைக்கும் கார் சேஸிற்கும் இடையேயான உயரம் ரெண்டையும் குறிச்சுகோங்க.
அதே அளவுகளில் பிவிசி பைப்புகள் வாங்கி சரியான அளவுகளில் வெட்டிக்கோங்க.ரெண்டு பக்கமும் எண்டு கேப் (END CAP)எனப்படும் மூடி வாங்கி பிவிசி சொல்யூஷன் வாங்கி நல்லா ஒட்டிக்கோங்க.எட்டு முதல் 10 பைப் காருக்கு அளவா தேவைப்படும்.
நல்லது.மழை ஆரம்பிக்குதா?தண்ணி கூடுதா?காரு முங்கும்னு தோணுதா ?எல்லா பைப்பையும் காருக்கு அடியிலே பக்கம் பக்கமா வச்சு கிரிப் பெல்ட் போட்டு இறுக்குங்க!லெஃப்ட் ,ரைட் காருக்கு மேலே வழியா நைலான் டேப் அடிச்சுருங்க!
அவ்ளோதானுங்க.
கண்டிப்பான முறையில் எக்காரணம் கொண்டும் சேஸ் தாண்டி உங்க காரிலே ப்ளாட்பார்முக்கு கூட தண்ணீர் எட்டி உள்ளே போகாது.இதுக்கு செலவு 4000 ரூபாய் ஆகுமுங்க .மழையில்லாத நேரத்துல எல்லா பைப்பையும் ஒண்ணா கட்டி பார்க்கிங் மூலையிலே கார் நம்பர் போட்டு வச்சுறலாம்.
இன்னும் கொஞ்சம் பணமிருந்தா 9 டியூப் 10000 ரூபாய்க்கு வாங்கி வச்சுட்டு மழை வர்றப்போ காருக்கு அடியிலே டியூப் கட்டி சின்ன பம்புல ஏர் பிடிச்சுரலாம்.இதுக்கு கார்லே இருக்குற லைட்டர் ப்ளக் லேயே சார்ஜ் போடலாம் .ஏன்னா மழையிலே கரண்டும் போயிருக்குமில்லையா ?
இதனை தாராளமா நம்பி செய்யலாம்.ஏன்னா கார்லே நாலு டயர்லே இருக்குற காத்தும் ஓரளவுக்கு மிதக்குறதுக்கு சப்போர்ட் பண்ணும்.
1991 ஆம் வருஷம் ஒரு டேங்கர் லாரி பாம்பன் பாலத்துலேருந்து கடலிலே விழுந்துருச்சு.ஆனா மிதந்துருச்சு.அதை அப்படியே கரைக்கு கொண்டுவந்து லேசா ரிப்பேர் பார்த்து மறுபடியும் ஓடவச்சாங்க.அந்த லாரி பேரு கடல்கன்னி!
யானை வாங்கிட்டோம் .தொரட்டி வாங்கமாட்டோமா ?
ஐடியா பிடிச்சா யார்க்கு ஹெல்ப் வேணுமோ நான் கூட வரேன்