Showing posts with label எல்ட.பி.பிள்யூ விதிமுறை. Show all posts
Showing posts with label எல்ட.பி.பிள்யூ விதிமுறை. Show all posts

Thursday, November 30, 2023

எல்ட.பி.பிள்யூ விதிமுறை

 எல்ட.பி.பிள்யூ விதிமுறை கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் குழப்பம் நிறைந்த விதிமுறைகளாகும்.

உதாரணமாக கால்பந்தில் offside விதிமுறையை போலவே இதுவும் இருக்கும்.

எல்.பி.டபிள்யூ முடிவுகளை எடுப்பது நடுவர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாகும்.ஒரு நடுவர் சிறந்த முடிவுகளை எடுப்பவர் என்பதற்கு அளவுகோலாக எல்.பி.டபிள்யூ முடிவுகள் இருக்கும்.

"L.B.W = Leg Before Wicket"

எல்.பி.டபிள்யூ என்பது ஒரு பேட்ஸ்மேன் பந்தை தன் காலால் தடுத்துவிட்டால் அந்த பந்து ஸ்டம்பினை பதம் பார்க்கும் எனில் அந்த பேட்ஸ்மேன் எல்.பி.டபிள்யூ என்ற முறையில் அவுட் என்று நடுவரால் அறிவிக்கப்படுவார்.

எல்.பி.டபிள்யூ விதிகளை பார்ப்பதற்கு முன் சில key terminologies தெரிந்து கொள்வது அவசியம்.

  • மேலே படத்தில் பிட்சின் நடுவிலே பிங்க் நிறத்தில் உள்ள கோடு ஸ்டம்ப் லைன் என்று அழைக்கப்படும்.
  • ஒரு வலக்கை பாட்ஸ்மேனின் வலது புறம் முழுவதும் off side மற்றும் இடது பக்கம் முழுவதும் leg side என்றும் அழைக்கப்படும்.
  • impact என்பது பந்து காலில் படுவதைக் குறிக்கும்.

நடுவர் எல்.பி.டபிள்யூ முறையில் ஒரு பேட்ஸ்மேன்க்கு அவுட்/நாட் அவுட் என்று முடிவு எடுக்கும் முன் கீழே குறிப்பிட்டுள்ள விஷயங்களைக் கருத்தில் கொண்டு முடிவெடுப்பார்.

  1. பந்து பிட்ச் செய்யும் இடம்
  2. impact of leg
  3. shot offered or not
  4. spin / bounce
  5. wickets hitting

இப்பொழுது பதிலுக்கு வருவோம்

not out விதிமுறைகள் :

  • முதலில் பந்து No Ball ஆக இருந்தால் அது "legal delivery " ஆக கணக்கில் கொள்ளப்பட மாட்டாது.எனவே முதலில் பந்து நோ பாலாக இல்லாமல் இருப்பது அவசியம்.
  • பந்து காலில் படுவதற்கு முன் பேட் அல்லது கையுறை ஏதேனும் ஒன்றில் பட்டால் எல்.பி.டபிள்யூ ஆக கணக்கில் கொள்ளப்பட மாட்டாது.
  • பந்து பிட்சில் "outside leg stump" பகுதியில் பட்டு காலில் பட்டால் அது stump ஐ தகர்க்கக்கூடிய பந்தாக இருந்தாலும் எல்.பி.டபிள்யூ முறையில் அவருக்கு அவுட் தர இயலாது.
  • இந்த விதி எதற்கு எனில் பந்து outside leg பகுதியில் பட்டு வந்தால் பேட்ஸ்மேன் பந்தை பேட்டில் தடுப்பதற்கு முன் காலில் படுவதற்கு நெறய வாய்ப்பு இருப்பதால் இந்த விதியை விதித்துள்ளனர்.
  • பந்து காலில் பட்ட பகுதி ( Impact ) "Stump Line" உள்ளே இல்லாமல் வெளியே பட்டால் அந்த பந்து stump ஐ பதம் பார்க்கும் பந்தாக இருந்தாலும் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் தரப்படமாட்டாது.( அந்த பந்தை அடிக்க முயற்சி செய்தால் மட்டுமே இந்த விதி பொருந்தும் )

மேலே குறிப்பிட்ட விதிகளில் ஏதேனும் ஒன்று நடந்தாலும் பேட்ஸ்மேன் எல்.பி.டபிள்யூ முறையில் நடுவர் அவுட் தர இயலாது.

Out விதிமுறைகள்:

  • பந்தை அடிக்க முற்படும் போது :
    • பேட்ஸ்மேன் பந்தை அடிக்க முற்படும் போது பேட்டில் படாமல் காலில் பட்டால் அந்த பந்து பிட்சில் "stump line " இல் பட்டோ அல்லது "outside the off stump "பகுதியில் பட்டோ காலில் பட்டால் அந்த பந்து stump ஐ தகர்க்குமாயின் பேட்ஸ்மேன் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் என்று நடுவரால் அறிவிக்கப்படுவார் .
  • பேட்ஸ்மேன் பந்தை அடிக்க முயற்சி செய்யாமல் இருந்தால்
    • இந்த சமயத்தில் பந்து பிட்சில் "Outside Leg " பகுதியில் படாமல் பிற பகுதியில் பட்டு பேட்ஸ்மேன் பந்தை அடிக்காமல் விட நினைக்கும் பொழுது எதிர்பாராத விதமாக காலில் பட்டால் "Impact" stump line உள்ளே இல்லாமல் இருந்தாலும் அந்த பந்து stump ஐ தகர்க்க கூடிய பந்தாக இருந்தால் பேட்ஸ்மேன் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் என்று நடுவரால் அறிவிக்கப்படுவார்.
  • பந்து காலில் மட்டும் படாமல் எந்த பகுதியிலும் பட்டால் (பேட் மற்றும் கையுறை தவிர) அந்த பந்து stump ஐ தகர்த்தும் எனில் பேட்ஸ்மேன் அவுட் என்று தீர்ப்பு நடுவர் வழங்கலாம்.

மேலே உள்ள படத்தில் சச்சின் தோள்பட்டையில் பந்து பட்டதற்க்கு எல்.பி.டபிள்யு முறையில் அவுட் தரப்பட்டது.

எல்.பி.டபிள்யூ பற்றிய குழப்பங்கள் இந்த பதிலை படித்தவுடன் தீர்ந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.

ஏதேனும் குழப்பம் இருந்தால் கீழே குறிப்பிட்டுள்ள காணொளி யை கண்டு கொள்ளவும்

https://youtu.be/Dk1-8NtAavA

பட விநயம் : Google

நீளமான பதிலை படித்ததற்கு நன்றி



KING MAKER !

  ஐம்பது வருடத்துக்கு முன் நடந்த சரித்திரம் தெறியாமல் வந்து விழுந்த கேள்வி ! KING MAKER ! இது தான் பெருந்தலைவரின் பட்டம் ! பழைய காங்கிரஸ் கட...