ஆரம்ப காலத்தில் திராவிடர் கழகத்தாரால் "சனாதன தர்மம் ஒழிப்பு" என்பது கொள்கை முடிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதா? சான்றுகளுடன் கருத்து பதிவு அளிக்க முடியுமா?
( திருத்தப்பட்ட பதிவு)
ஏன் என்று தெரியாது.
இன்று என் கண்ணில் பட்டது. மிகவும் மெனக் கெடலுடன் ஆய்வு செய்து கருத்து பதிவு செய்கிறேன்.
மாற்று கருத்து இருப்பின் நாகரீகமாக சொற்களை தேடி மறுக்கவும். தவறு இருப்பின் திருத்தி கொள்கிறேன்.
.
இன்று திராவிட கட்சியின் முக்கிய கொள்கையாக இருப்பது..
பொய் பேசும் மனிதர்கள்
உண்மையே சொல்லும் படங்கள்.
" சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும்",
"இந்து மதம் அடியோடு வேரறுக்க பட வேண்டும்"
இவற்றை மிகவும் அழுத்தம் திருத்தமாக, தெள்ள தெளிவாக, சந்தேகத்திற்கு இடம் கொடாமல் கூறி வருகிறார்.
யார் அது?
தமிழக இன்றைய விளையாட்டு மந்திரி, முதன் மந்திரியின் புதல்வர், முத்தமிழ் காவலர் கலைஞரின் மகன் வழி பேரன். தங்கள் கழகம் துவக்கியதே இதற்குத்தான் என்றும் சொல்லி விட்டார்.
அவர் சொல்லியது உண்மை தானா?
வாருங்கள் அலசுவோம் . ஆதாரங்களுடன்.
.
இந்த குண குன்று திராவிட கொள்கையை பற்றி பேசியது , ஈ வே ரா வழி வந்த , கி. வீரமணி, அரசு
அறநிலைய துறை அமைச்சர் உடன் இருக்கும் பொழுது.
.
இந்த பேச்சு நாடு முழுவதும், ஏன் பல நாடு களிலும் பேசும் பொருளாகவும், மாறி விட்டது.
சனாதன தர்மம், மதம், இந்துதர்மம், மனு தர்மம், வர்ணாசிரமம், தாழ்த்த, பிர்படுத்த பட்ட, SC ,ST, OBC, போன்ற சொற்களின் அர்த்தம் தெளிவு படுத்த பட்டுள்ளது. நடந்த நற்காரியம் இது ஒன்றே.
நீதி மன்றங்களில் வழக்குகள் பதிவு செய்ய படுகிறது.
.
திராவிடத்தின் முன்னோடிகள் , T.M. நாயர்,நடேசனார், பிட்டி தியாகராயர், மற்றும் சௌந்தரபாண்டியன், வெள்ளையர் ஆட்சி வேண்டும் என்பது அடிப்படை கொள்கை.
பனகல் அரசர், கன்னடம் பேசும் ஈ வே ராமசாமி அவர்களும் சேர்ந்து விட்டனர். திராவிடம் பிறந்து விட்டது.
ஜஸ்டிஸ் பார்ட்டி, திராவிடர் கழகம், தி. மு.க, அ. தி.. மு க. மேலும் பல உதிரி கட்சிகளின் பலமே, அவர்களின்:
அடுக்கு மொழி நாவன்மை
மேடை தமிழ்
சரளமான எழுத்து நடை
சினிமா கவர்ச்சி
முன்னோடிகள் ஆரம்பித்த போது அன்றைய சென்னை மாநிலம் தென் குமரி முதல் வடக்கே ஒரிசா பகுதி வரை நீண்டு இருந்தது. ஆகவே….
"தென்இந்தியர் நல உரிமை சங்கம்."
என்று ஆரம்பித்து, பின்
" பிராமணர் அல்லாதோர் இயக்கம்"
ஆக மாறி, பிறவி பிராமண எதிர்பாளராக இருந்த ஈ வே ராமசாமி நாயக்கர் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி
"சுய மரியாதை இயக்கம் "
கண்டு, பின்பு திராவிடன், "திராவிடர் கழகம் "ஆக மாறியது. 1970 கழில் சில இடங்களில் ராமர் , பிள்ளையார் சிலை உடைப்பு , அவமதிப்பு ஊர்வலம் நடந்தது உண்மை. ஆனாலும் இந்து மத ஒழிப்பு என்பதை கொள்கையாக அறிவிக்க வில்லை. பார்ப்பனர் எதிர்ப்பு என்பது தொடர்ந்தது.
C. N அண்ணாதுரை, நெடுஞ்செழியன் மதியழகன், தொடர்ந்து கலைஞர் கருணாநிதி போன்றோரும் , சமூக நீதி காக்க கழகத்தை, கருப்பு சட்டை அணிந்து முன்னெடுத்தனர்.
.
பெரிதும் உதவியது பத்திரிக்கை.. MGR என்ற மந்திர சொல்.
1882 ல் வெளி யான தத்துவவிவேசினி என்ற இதழ் முதல் இன்றைய முரசொலி வரை நூற்று கணக்கான பத்திரிக்கை திராவிடர் கழக கொள்கை களை பறை சாற்றியது.
ஆரம்பகால பத்திரிகை குறிப்பிட்டது எல்லாம் …
பிராமணர் அல்லாத பிரசமூகத்தினர் முன்னேற்றம், மற்றும்
பிராமணர் எதிர்ப்பு, பற்றியே பேசியது. ஆலய நுழைவு, வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது, அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு, பின்பு , தனி தமிழ் நாடு, இந்தி எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, சமூக நீதி காவல்,
.
கலைஞர் கருணாநிதி யின் கருத்துகள் கூட
"சனாதன ஒழிப்பு" இந்து மத அழிப்பு "
பற்றி பேச வில்லை.
அப்படி இருக்கையில் எப்படி திடீரென்று இளவல் என்னென்னமோ பேச, தந்தை மறுப்பு கூற முடியாமல் தவிக்க ….நேற்று வரை இருந்த.. தி. மூ. க. இன்று திசை மாறி போனது ஏனோ? திராவிட மாடல் வேரு குறிக்கிட்டது.
தெரிந்தால் கூறுங்களேன். நன்றியுடயவனாய் இருப்பேன்.
தத்துவவிவெஸினி , முன்னோடி நாத்திக இதழ்
வருடம் 1882
திராவிடன் முதல் இதழ். வருடம் 1917. திராவிட இயக்கம்
Justice. நீதிக்கட்சியின் இதல். வருடம் 1917
குடியரசு, ஈ வே ரா நடத்திய முதல் இதழ். தேதி. 17.7.1927
REVOLT …பெரியார் நடத்தியது 21.11.1928
அத்தனை பத்திரிக்கையின் முதல் இதழ் முதல் பக்கத்தை இங்கு பதிவேற்றி உள்ளேன்.
……