Showing posts with label ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா. Show all posts
Showing posts with label ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா. Show all posts

Friday, July 2, 2021

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவின் முகப்புத் தோற்றம்

அமைவிடம்

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவின் நுழைவுப்பகுதி

இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கத்திலிருந்து மேற்கே 6.கி.மீ தொலைவிலும், காவிரி ஆற்றிலிருந்து கொள்ளிடம் ஆறு பிரியும் இடமான முக்கொம்பிலிருந்து கிழக்கே 7 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. வண்ணத்துப்பூச்சி பூங்காவின் வடக்குப்புறத்தில் கொள்ளிடம் ஆறு தெற்குப்புறத்தில் காவிரி ஆறுகள் உள்ளன.

நட்சத்திர வனம்

இந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவில் 27 நட்சத்திரங்களுக்கு உரிய 27 வகை மரங்களை கொண்ட நட்சத்திர வனம் அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திரமாநிலம் ராஜமுந்திரியில் இருந்து சுமார் 30 அடி உயரம் வளரக்கூடிய 9 அடி உயரம் கொண்ட 5000 மரச் செடிகள் வரவழைக்கப்பட்டு நடப்பட்டுள்ளது

பூங்காவின் முக்கியப் பகுதிகள்

வண்ணத்துப்பூச்சி இனப்பெருக்க மையம்

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவிலுள்ள செயற்கை கல்மரம்- பின்னணியில் இனக்பெருக்க மையம்
ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவின் இனப்பெருக்க மையம்

ஒரு ஏக்கர் பரப்பளவில் வண்ணத்துபூச்சிகளின் உற்பத்தி பெருக்குவதற்கான நவீன வசதிகள் கொண்ட உள்ளரங்கு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இங்கு வண்ணத்துப்பூச்சிகள் நவீன தொழில்நுட்ப முறையிலும் இயற்கை முறையிலும் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.

வளர்க்கப்படும் தாவரங்கள்

இந்த பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகள் விரும்பி உண்ணும் தாவரங்களான சின்யா, பென்டாஸ், டிரைக்டரி, கோபி, அஸ்காப்பியா போன்றவையும் பல்வேறு வகையான மலர்ச்செடிகளும் குறுமரங்கள், குறுஞ்செடிகள், புற்கள் போன்றவையும் அது தவிர ஏராளமான மரங்களும் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

படகுக்குளம் மற்றும் கல்மரம்

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவிலுள்ள சிறுவர்கள் படகுக்குளம்

இந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவில் அரை ஏக்கர் பரப்பளவில் சிறுவர் படகுக்குளம் மற்றும் இரும்பு தகடுகளால் வண்ணத்துப்பூச்சி வடிவில் செயற்கையாக செய்யப்பட்ட உருவமும், கல்மரமும், வண்டுகள்வெட்டுக்கிளி, உள்ளிட்ட பூச்சி வகைகள் செயற்கை கல்மரத்தில் மொய்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சிறுவர் விளையாட்டுப் பூங்கா

இப்பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கு தனிப்பூங்கா உள்ளது. இதில் ஊஞ்சல், சறுக்கு ஏணி, இராட்டினங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வசதிகள்தொகு

இந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வாகன நிறுத்துமிடங்கள், குடிநீர் வசதிகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பி்டங்கள் இளைப்பாறும் குடில்கள் நிழற்குடைகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

செயற்கை குளம் மற்றும் நடைபாதைகள்தொகு

நீருற்றுகள், நீர்தாவரங்கள் கொண்ட குட்டைகள் அவற்றின் மீது மரப்பாலங்கள், பார்வையாளர்கள் சுற்றி வர 4 கி.மீ தூரம் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. வண்ணத்துப்பூச்சியின் மாதிரி உருவங்களும் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளன

கட்டணங்கள்

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவை பார்வையிட பெரியவர்களுக்கு 10 ரூபாயும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 5 ரூபாயும் ஒளிப்படக் கருவிக்கு 20 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வாகன நிறுத்தக்கட்டணமாக மிதிவண்டிக்கு 5 ரூபாயும் இருசக்கர வாகனங்கள், தானிக்கு 10 ரூபாயும், மகிழுந்துக்கு 20 ரூபாயும், சிற்றுந்து பேருந்துகளுக்கு 75 ரூபாயும் கட்டணமாக வனத்துறையால் வசூலிக்கப்படுகிறது



இந்தியாவின் முதல் வார இதழா

  ரஸ்ஸி கரஞ்சியா என்பவரால் 1941 Blitz , பிளிட்ஸ் சிறுபத்திரிகை தொடங்கப்பட்டது, இது இந்தியாவின் முதல் வார இதழாகும். இது புலனாய்வு பத்திரிகை ம...