Sunday, May 7, 2023

சென்னையிலேயே இருந்தும் நாம் அடிக்கடி பார்த்த

 சென்னையிலேயே இருந்தும் நாம் அடிக்கடி பார்த்த இடங்களாயிருந்தாலும் இப்போ ஒவ்வொன்னோட சிறப்பு/வரலாறு தெரியும்போது ஆச்சரயமாததான் இருக்கு. எது எதிலெல்லாம் சென்னைக்கு முதல் இடம்/சிறப்புத் தெரியுமா?

  1. முதல் என்ஜினீயரிங் காலேஜ் ஆரம்பிக்கப்பட்டது 1794ல் சென்னை கிண்டியில். சிவில் சர்வே ஸ்கூல் என்ற பெயரில் தான் முதலில் துவக்கப்பட்டது. இந்தியாவோட முதல் என்ஜினீயரிங் காலேஜ்கிற பட்டத்தை தட்டிட்டு எவ்வளவு கம்பீரமா இன்னும் நிற்கிது இல்ல?

2. ஸ்பென்சர் பிளாசா. 1863லே இங்கிலீஸ் காரங்களுக்கு கட்டப்பட்ட முதல் ஷாப்பிங் மால்.

3.1920 லே கட்டப்பட்ட மிகப் பழமையான

மரூத்துவமனை

4.மிகப் பழமையான சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம

5.ஆசியாவிலேயே மிக பெரிய கோயம்பேடு பேருந்து நிலையம்

6.வங்காள விரிகுடாவிலேயே பெரியதும்.இந்தியாவில் உள்ள பெரிய செயறகைத் துறைமுகம்

7.முதல் பேங்க்.1683 ல் ஆரம்பிக்கப்பட்ட

மெட்ராஸ் பேங்க் இது தான்.கிட்டத்தட்ட 100 வருடத்திற்கு பிறகு தான் பேங்க் ஆப் ஹிந்துஸ்தான், ஜெனரல் பேங்க் ஆப் இந்தியா வந்தன.

8.உலக வங்கியின் வாஷிங்டனில் உள்ள தலைமை அலுவலகத்தை அடுத்து வெளியே உள்ள நிரந்தர அலுவலகம் தரமணியிலுள்ளது.

9.மெட்ராஸ் பல்கலைக்கழகம் 1930ல் முதன் முதலில் இசையில் பட்டப்படிப்பு தொடங்கியது.

10.உலகத்திலேயே லண்டனுக்கு அடுத்து உள்ள மிகப் பெரிய நீதிமன்ற வளாகம்

11.1959ல் கட்டி முடிக்கப்பட்ட அந்தக் காலத்திய இந்தியாவின் உயரமான கட்டிடம்.

12.இந்தியா வின் பழமையான சிறைச்சாலை. இப்போது சிறைச்சாலை மட்டும் புழலுக்கு மாற்றப்பட்டுவிட்டது.

13.1688ல் துவக்கப்பட்டு இன்றும் இயங்கி வரும் முனிசிபல் கார்பொரேஷன்

14.இந்தியாவின் மூன்றாவது பெரிய. பீனிக்ஸ் ஷாப்பிங் மால்

15.1678ல் கட்டப்பட்டு இன்றும் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள மேரி மாதா ஆலயம்.. இதை பற்றி ஏற்கெனவே விரிவாக ஒரு கேள்வி பதிலில் சொல்லியுள்ளேன்.

16.ஆசியாவிலேயே முதன்முதலில் உடற் கல்விக்காக 1920ல் தொடங்கப்பட்ட கல்லூரி

இன்னும் சொல்றதுக்கு எவ்வளவோ இருக்கு என்னுடைய பேவரைட் பழமையான ஹிக்கிம்பாதம்ஸ் புத்தகக்கடை, ராயபுரம் ரயில் நிலயம், ஆசியாவிலேயே பெரிய சிபகாட் it பார்க், ஸ்ஸ்…….அ.ப்பா இப்பவே கண்ணை கட்டுதே……லிஸ்ட் ரொம்ப பெரிசு.

உங்களுக்குத் தெரியுமா சென்னை உலகத்திலே பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்களில் ஒண்ணாம்!☺

இது எல்லாத்தையும் விட உலகப் போர் 1 நடந்தப்ப இந்தியாவிலேயே பாதிக்கப்பட்டது சென்னை தான். எம்டன் கப்பல் போட்ட குண்டு உயர் நீதிமன்ற சுவரிலே துளைச்சி போனதை குறிச்சி வச்சிருக்காங்க.

சரி வந்தது தான் வந்தீங்க. அப்படியே மெட்றாசை சுத்தி பார்த்துட்டு வருவோம் வாங்க!😁😀

திருத்தம் 1

சும்மா பார்த்துக்கிட்டே போனா எப்படி? வோட்டை போடறது

திருத்தம் 2

5000 க்கும் மேற்ப்பட்ட பார்வைகள்!! ஆதரவு கொடுத்த அனைத்து நல்ல இதயங்களுக்கும் நன்றி!!

இதையும் பாருங்க!!

சுற்றுலா பயணிகளின் விருப்ப தேர்வாக சென்னையில் உள்ள இடங்கள் என்னென்ன? கேள்விக்கு ஸ்ரீஜா சுப்ரமணியன் (Shirijha Subramanian)-இன் பதில்

No comments:

Post a Comment

KING MAKER !

  ஐம்பது வருடத்துக்கு முன் நடந்த சரித்திரம் தெறியாமல் வந்து விழுந்த கேள்வி ! KING MAKER ! இது தான் பெருந்தலைவரின் பட்டம் ! பழைய காங்கிரஸ் கட...