Wednesday, July 19, 2023

சபாபதி நல்ல படம்

 சபாபதி தான்.ஒரு முறை அல்ல, பலமுறை பார்த்தும் சலிக்காத ஒரு படம். படத்தில் ஒரு காட்சியில் கூட சோகம் என்பதே இருக்காது. பழைய படம் என்றாலே ஒரே சோகமும், செண்டிமன்ட் காட்சியும் கொல்லும் என்றால் இந்த படம் அப்படி இருக்காது.ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை சுவரசியம் குறையாது. சபாபதி படத்திற்கு பின் காதலிக்க நேரமில்லை, உள்ளத்தை அள்ளி தா மட்டுமே முழு நீள நகைச்சுவை திரைப்படங்கள்.

இந்த 1941ல் தான் எடுக்கப்பட்டதா என சந்தேகம் அடிக்கடி வரும். அதே நேரம் அக்கால கட்ட வளர்ச்சியும் பின்னால் பலர் கட்டிய பொய்யையும் அறியலாம். பம்மல் சம்மந்த முதலியாரின் நாடகத்தை, AV. மெய்யப்ப செட்டியார் திரைப்படமாக எடுத்துள்ளார். அக்கால கட்ட நாடகங்கள் நல்ல ரசனையுடன் எடுக்கப்பட்டுள்ளன என்பதற்கு இது தான் சான்று.

செல்வந்தர் மாணிக்க முதலியாரின் ஒரே மகன் சபாபதி, பள்ளி இறுதி வகுப்பில் படிப்பவர், தேர்வில் தோல்வியுற்றவர், அவர் வீட்டு வேலைக்காரன் பெயரும் சபாபாதி தான். இவரோ பெரும் அப்பாவி, " சோடா, உடைத்து எடுத்து வா என்றால் பாட்டிலை உடைத்து எடுத்து வருவார் "அவ்வளவு புத்திசாலி. 1941ல் பள்ளி தமிழ் ஆசிரியரை கிண்டல் செய்தல், வகுப்பறையில் தூங்கும் அவருக்கு மீசை வரைதல் என அப்போதே அலப்பறைகள் செய்துள்ளனர். ரோட்டில் செல்லும் யாரையாவது சீட்டு கட்டு விளையாட அழைத்து வா என, மாணவன் சபாபதி சொல்ல, வேலைக்காரன் சபாபதி அவ்வழியே செல்லும் அவர்கள் பள்ளி தமிழ் வாத்தியரை அழைத்து வர ஒரே ரகளை தான்.

சபாபதி பெயில் ஆனதும் தூக்கு போடுவதை போல் நடித்து அப்பாவின் கோவத்தில் தப்பிக்கிறார். உடனடியாக அவருக்கு பெண் பார்க்கும் படலமும் ஆரம்பிக்கிறது. படித்த சிவகாமுவை மணமுடிக்கின்றனர். வேலைகாரன் சபாபதிக்கு சிவகாமு வீட்டு வேலைக்காரி குண்டுமுத்துவுடன் திருமணம் ஆகிறது. அதும் எப்படி என்றால் குண்டுமுத்து தூங்கும் போது சபாபதி தாலி கட்டி அடியும் வாங்கி கொள்கிறார். இதற்கு ஐடியா முதலாளி சபாபதி. படம் முழுக்க ஒரே சிரிப்பாக தான் இருக்கும். . .TR.ராமச்சந்திரன், லக்ஸ் சோப் பத்மா, காளி ரத்னம், ராஜ காந்தம் ,சாரங்கபாணி போன்றோர் நடித்துள்ளனர். இது எல்லாம் யாருண்ணே தெரியாதுல 😂.

இந்த படம் வேறொரு செய்தியை எனக்கு சொல்லியது. கணவருக்கு சொல்லி கொடுத்து அவரை பாஸ் செய்ய வைக்கும் அளவிற்கு பெண்கள் 1940களில் படித்துள்ளனர். வேலைக்காரன், வேலைக்காரி இருவரும் குடும்ப உறுப்பினர் போல நடத்தபடுகின்றனர். வேலைக்காரியும் படித்துள்ளார் என்பது தான் அழுத்தமான செய்தி. குடியானவர் ஒருவர் குடிப்போதையில் முதலியாரை அடிக்க போவதாக ரகளை செய்வார். அவருக்கு பயந்து சபாபதி வெளியே வர மாட்டார். அதாவது தலித்துகள் அடிமைத்தனம் இல்லாமல் அப்போதே மேல் ஜாதிகாரர்களுடன் சண்டை போடும் துணிவோடும் இருந்துள்ளனர். அப்போதைய மக்கள் வெள்ளைக்காரன் ஆட்சியிலும் சற்று நிம்மதியாக இருந்துள்ளனர்.

இது எல்லாம் 1941ல் பெரியார் திராவிடர் கழகம் துவங்கும் முன் 😂😂. . .

No comments:

Post a Comment

KING MAKER !

  ஐம்பது வருடத்துக்கு முன் நடந்த சரித்திரம் தெறியாமல் வந்து விழுந்த கேள்வி ! KING MAKER ! இது தான் பெருந்தலைவரின் பட்டம் ! பழைய காங்கிரஸ் கட...