25 வருடங்களாக வழக்கத்திலிருந்த எந்த ஒரு விஷயம் இன்று வழக்கொழிந்து விட்டது?
இளைய சமுதாய. தெரிந்து கொள்ள வேண்டி , 75 வருடத்திற்கு முன் கண்டது இன்று காணாமல் போனது என்று வைத்து கொள்ளலாம்.
இந்த வினாவுக்கு விடை முற்றிலும் படக்காட்சி ஆக பகிர்வதில் இரட்டிப்பு மகிழ்சியே.
முதல் படம் எனது இளமை கால நினைவுகள். திருட்டு அடி பட்ட மாங்காய் கடித்து தின்றால் , சுகம் தனி சுகமே.
4 சல்லி ஒரு ஓட்டை காலணா. 4 ஓட்டை 1 அணா, 16 அணா ஓர் ரூபாய்
பழைய கணக்கு பேராண்டி பழைய கணக்குதான். ஒரு ஓட்டை கொடுத்தா ஒருபொட்டலம் வேர்கடலை, அல்லது பக்கோடா, அல்லது பேரிச்சம்பழம் வாங்க முடியும்.
இன்று நாம் அனுபவிக்கும் மின்சாரம், 1950-1960 வரை பரவலாக பயன் பாட்டுக்கு வரவில்லை. திக். திக்.
எல்லா இடங்களிலும் மண் எண்ணை விளக்கு தான், படிப்பு, சாப்பாடு அத்தனையும். எண்ணை திரி, வத்திகுச்சி, அத்தியாவசிய பொருள்
எலக்ட்ரிக் பல்ப், பேன், கனவு தான். ஃப்ரிட்ஜ், டிவி, ஃபோன், கார், ஸ்கூட்டர், மோட்டார் பைக், என்னவென்றே தெரியாது. ஒண்ணு இரண்டு sidecar bike பணக்கார முதலாளிகளிடம் உண்டு.ம
இருட்டியவுடன், குத்து விளக்கு, அகல், எண்ணை விளக்கு ஏற்றுவார்கள், ஒவ்வொரு வீட்டின் தலை வாசலில் மாட குளி ஒன்றில் அகல் விளக்கு வைக்கப்படும்.
திண்ணை வீடு மாட குழியும் விளக்கு வைக்க, திண்ணை பசியாற, சடவு ஆர, படிக்க அதிதிகள் விருந்துண்ண, பஞ்சாயத்து பண்ண, படுத்ததுரங்க. All purpose free area.
சைக்கிள் மண் எண்ணெய் விளக்கு இல்லாமல் ஓட்டினால் போலீஸ் பிடிக்கும். வெளியே சென்றோர் 7 மணிக்கு முன் வீடு திரும்பி விடுவர். சாப்பிட்டு 8 மணிக்குள் ஊர் அடங்கி விடும். சினிமா கொட்டகை உண்டு. பாத்துட்டு 10 மணிக்கு பேய் உலவும் நேரம் பயந்து கொண்டு வருவர்.
" வேப்ப மர உச்சியில் மேலே பேய் நின்னு ஆடுதுண்ணு விளையாட போகையிலே சொல்லி வைப்பாங்க"
கும் இருட்டு எங்கும்.
சில வீடுகளில் ரேடியோ பாடும். இலங்கை வானொலி மயில்வாகனன் அளிக்கும் நேயர் விருப்பம் பிரபலம்.
"ஏரி கரை யின் மேலே போறவளே பெண் மயிலே " அப்ப கேட்கும் கானம்.
சமையல் செய்ய விறகு அடுப்பு மட்டும் தான். விறகு கடை எங்கும் உண்டு. காடு மறைவதை கண்டு, முள்ளு செடி விதை தூவி, ஊரே சீமை கருவேல முள்ளு காடாய் மாருச்சு..
.
கீழே காண்பது, சிம்னி விளக்கு, அரிகேன் விளக்கு, பெட்ரோமாக்ஸ் விளக்கு. தினமும், சுத்தம், செய்து, திரி மாற்றி, எண்ணை ஊத்தி தீ ஏத்த வேண்டும்.
தெருவிளக்கு கூட எண்ணெய் ஊத்தி ஏற்ற நகராட்சி அலுவலர் வருவார்.
BATA, Liberty, செருப்பு கடை இல்லை. ரப்பர் செருப்பு வரவில்லை. ரோடு ஓரம் இருக்கும் செருப்பு தைப்பவரிடம் கால் அளவு காட்டி, தோல், அல்லது, பழைய tyre rubber வெட்டி ஒட்டி கட்டி தருவார். பெரும்பாலோர் வெறும் கால் நடை தான். வெயில் காலம் கொடுமை.
மனிதனை மனிதன் இழுக்க, தனி மனித கொடுமை ஒழிக்க தொண்டு செய்தவர் புரட்சி தலைவர் M G ராமசந்திரன்.
பின் சைக்கிள் ரிக்க்ஷா வந்தது.
பங்காளி உடன் வர பக்க வண்டி. டாக்டர் கூட நரசம்மா வண்டியில் வருவதை கண்டதுண்டு.
கருப்பு துணி மூடிக்கிட்டு ஸ்மைல் பிளீஸ் சொல்லி லென்ஸ் மூடி திறப்பார். அம்பட்டுதான், நாம உள்ளே விளுந்துடுவோம். 3 நாள் கழிச்சு பிரின்ட் கொடுப்பார்.
கணக்கு போட இயந்திரங்கள், காணாமல் போயின.
தேர்தல் கோசம்.
உங்கள் பொன்னான வாக்குகளை தாமரை பெட்டியில் போடுங்க.
மரக்காதீர் கதிர் அரிவா பெட்டி.
பார் பார் பட்டணம் பாரு, படம் பாரு. ஓட்டை வழியே சினிமா.
பித்தளை பானை குடம்அண்டா குண்டா சர்வ சட்டி, தூக்கு போனி,
குதிரை மாட்டு லாடம் அடித்தல். இரும்பில் லாடம் ஆணி கால் குழம்பில்.
பனை மரத்தடியில் அமர்ந்து , பச்சை ஓலை பட்டையில் பதநீர் குடிப்பது தனி சுகம். நுங்கு மாம்பலம் கசக்கி பிழிந்து பதநீர் குடிப்பது பரம சுகம்.
நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது, ஜக்கம்மா சொல்லிபுட்டா
கொஞ்சம் தண்ணி கண்டாலும் காகித கப்பல் ஒட்டலாம்.
விளக்கு மாத்து அடி கொடுக்கும் அம்மாவும் உண்டு.
குழந்தை களுக்கு அரைஞாண் கயிறு , கருப்பு நூல், வெள்ளி கொடி, தங்க சலங்கை அவரவர் வசதிபடி கட்டி விடுவாங்க. பெண் பிள்ளை களுக் அறை மூடி
படம் பார்க்க
பாசக்கார அம்மா பாடி கொண்டே குளிப்பாட்டி விடும் அதே அம்மா.
பயணம் செய்ய, மிதி வண்டி, இரட்டை மாட்டு, ஒத்தை மாட்டு கூண்டு வண்டி. எப்பவோ புகை கக்கி கொண்டு புழுதி வாரும் பஸ் வரும்.
Mixi , juicer, blender, grinder, coconut scrapper, coffee maker, gas stove, home theater AC கிடையாது.
ஃபோன் வந்தது. Telephone company யய் கூப்பிட்டு நம்பர் சொன்னால், தொடர்பு ஆனதும் மணி அடித்து அழைப்பார்கள், யோகம் செய்தவர் பேசமுடியும்.
Ball pen, laptop, printer, computer கண்டு பிடிக்க வில்லை.
எழுத slate குச்சி, போர்ட், chalk, பேனா கட்டை, மை கூடு, சட்டை எல்லாம் மை கரை உண்டு.
ஆட்டுகல் மாவு அரைக்க, அம்மி, சட்டினி, அரைக்க. திருவை பொடிக்க திரிக்க, அரிவாள்மனை காய் நறுக்க.
கல் உறல், உலக்கை, குந்தானி, கொண்டு இடிக்கும் அம்மா பாட்டி தான், ஆச்சி, சக்தி மசாலா ஓனர்ஸ்.
கிணத்து, அல்லது ஆற்று நீர். ஒரு சுற்று சுற்றி பிடித்தால் அழுக்காவது ஒன்னாவது. குடிக்கலாம், குளிக்கலாம். டேப், shower tub வேண்டாம். Lifebuoy , Lux, sunlight soap உண்டு. தெரு குழாயில் தண்ணீர் பிடிக்க சண்டை போடும் பெண்கள்.
வெற்றிலை பெட்டி. செல்ல மா வெத்திலை செல்லம்.
உள்ளே இருக்கும், கொழுந்து வெத்தல கொட்டை பாக்கு, ரோசா சுண்ணாம்பு, வாசனை புகையிலை, பாக்கு வெட்டி, கிராம்பு
மண் பானை சட்டி, நீர் பிடிக்க , சமைக்க , ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வரவில்லை. சாப்பிட வாழ இலை அல்லது மரத்தால் ஆன தட்டு உண்டு. அலுமினிய பாத்திரம் பித்தளை பாத்திரம் வந்தது.
சிறுவர் விளையாட இடம் நெறய. டயர் வண்டி, சில்லு அடி, கோலி குண்டு, மரம் ஏற, பம்பரம், குதிரை தாண்டல், கிணத்து நீரில் குதிப்பது, குட்டையில் கும்மாளம், பட்டம் பறக்கும், குலை குலை முந்திரிக்கா, பலிஞ் சடு குடு குடு, கிலிந்தட்டு, கில்லி, எல்லாமே அட்டகாசம் தான்.
பழம் டயர் வேகம் பிடிக்க அடிக்கணும்.
குரங்கு பெடல். ஆளும் வேண்டாம். தோளும் வேண்டாம்.
கார், பஸ் வண்டிகளுக்கு ஸ்டார்டர் பட்டன் கிடையாது. வண்டியின் முன் பக்கம் வழியாக ஒரு கம்பியை நுழைத்து என்ஜினை டர் தர் டார் என்று சுழற்ற வேண்டும் , எல்லோராலும் முடியாது.
அதுதான் டரு புறு மோட்டார் வண்டி என்று சொல்வதுண்டு.
இந்த சைக்கிள் பாண்டி கட்டம் வரையப்பட்டுள்ளது இங்கு அல்ல, அமெரிக்கா கலிஃபோர்னியா வில்.
பெண் பிள்ளைகளுக்கு கட்டுப்பாடு அதிகம், தினம் விளக்கு ஏத்தனும், சாமி கும்பிட, வீட்டு பாடம் எழுத, வாசல் தெளித்து கோலம் போட, துளசி செடி சுத்த, எண்ணை தேய்த்து தலை பின்னி, பொட்டு பூ வச்சு, அம்மா கிட்ட குட்டு வாங்க, நேரம் கிடைச்சா பாண்டி , ஓரி உலகெல்லாம் பாடி களச்சி விளையாட, வேப்ப மரத்தில் அம்மா புடவையை கட்டி ஊஞ்சல் பூ தொடுத்தல் அவ்வளவே. பல்லாங குளி, தாயம், ஸ்கிப்பிங் உண்டு. லைஃப் ஜோரு அல்ல போரு போரு தான்.
.
கண்ணில் படும் காட்சி, கல்லில் அடிச்சு துணி துவைக்க, பூம் பூம் மாடு, பால்காரர் எருமை மாடு கூட, பிடி அரிசிக்கு கீரை, நாத்தம் எடுக்கும் முனிசிபல் குப்பை, கக்கூஸ் வண்டி, பாம்பாட்டி, மயில் தயிலம், தேள் கடி வேரு விற்பவர் நட்டுவகாலியுடன், மீனு மீனு, சலவைகாரர் அழுக்கு மூட்டை, ஈயம் பித்தளை க்கு பேரீச்சம்பழம், அம்மா பாலு வேணுமா, குச்சி ஐஸ், ஆம வடை சுண்டல். களை கூத்து அதுவும் சிறுவர் சிறுமி உயிர் பயத்துடன்.
பெண்கள் தண்ணி குடம் சுமந்து, முள்ளு விறகு தலையில், ஆண்கள் வேகாத வெய்யிலில் பார வண்டி தள்ளி. கஷ்டம், வாழ்க்கை வாழ்வதற்கே, அனுபவிக்க அல்ல அதிகம் பேருக்கு.
அடிச்சு துவைக்கும் சலவை இயந்திரம் மும் அழகு தான். இது எப்படி இருக்கு.
பெண்களுக்கு அத்தனையும் உடற்பயிற்சி. ஜிம் என்றால் சும்மா.
கௌசல்யா சுப்ரஜா ராமா …
பூம் பூம் பூம் மாட்டுகாரன் தெருவில் வருவாண்டி.
நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது, குடு குடுப்பை காரர் வீட்டு முன் வந்து குறி சொல்வார்
ஸ்லேட் குச்சியில் இருந்து artificial intelligence and chatGPT வரை.
பாம்பு ஆட்டி ஆட்டு விப்பதுவும் இளம் பதுமை கயிர்றின் நின்று ஊசல் ஆடுவதும் ஒரு சாண் வயிற்றுக்கு .
குளத்தில் குளித்து முடித்து குடம் தண்ணீர் சுமந்து வரும் அம்மா.
சிக்கனம் இக்கணம், ரோட்டு ஓர Beauty parlour.
தள்ளு வண்டியில் பள்ளிக்கு செல்லல்.
சைக்கிள் பாண்டி. கால்கள் உரம் பெற.
பாவாடை தாவணியுடன் இளம் சிட்டுக்கள் இன்று டி ஷர்ட் ஜீன்ஸ் . கோலம் தான்.
நிலைமை மாறி பட்டு பாவாடை தாவணி க்கு மவுசு கூடி வருகிறது
அதிகாலை ஆரூ குளம் அருகில் இருந்தால் கும்மாளம் குளியல். குளிர்ச்சியான காட்சி. இன்று கிடைக்குமா?
மனிதனின் முதல் அடி நடை வண்டி ஓட்டம்.
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது…பாட்டும் கூத்தும் , விளையாட்டும்.
வீடு தோறும் கிணற்று நீர் இறைத்து கையில் வாங்கி குடிப்பது பரம சுகம். இன்று இப்படி செய்தால் ஊத்துவது மேல் சாதி, கை தாழ்த்து நீர் பருகுவது கீழ் சாதி என்று தூற்றும் அறிவிலர் உளர்.
ஆச்சி மசாலா ,அம்மா மசாலா ஒவ்வோரு வீட்டிலும் தனி சுவை.
வெந்நீர் போட கரி அடுப்பு. விறகு அடுப்பு ம் உண்டு. அந்த கால கொல்லை புறத்தில் காலை பரபரப்பில் கத கதப்பு நீர்.
மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியிலே, பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே.
அரிதாகி போன கொண்டாட்டம்.
அடிச்சு நொறுக்க கோலி சோடா, அஜீரணம் போக்கவும் கோலி சோடா
கட்ட கால் நடை மாதிரி டப்பா கால். சத்தம் செம. நடந்து பாத்தவங்களுக்கு தெரியும்.
சோடா பாட்டில் குப்பியை நசுக்கி இரண்டு ஓட்டை போட்ட, நூல் மாட்டி சுத்தி இழுத்தா சும்மா விர் விர்ண்ணு…
பட சுருள் காணோம். அத்தனையும் டிஜிட்டல். படு சீப்பு.
T. V antenna. காத்தடிச்சா திரும்பிடும். படமும் கலங்கி விடும்.
Cassette ஒரு கால தேவை. ஒரு வண்டி லோட் குப்பைக்கு போச்சு.
எலக்ட்ரிக் டிராம், மானிட டிராம். இரண்டும் ரோட்டில.
பொங்கல் வாழ்த்து அட்டை இல்லாமல் பொங்கல் உண்டா?
Type writer அடிக்க short hand எழுத தெரியாதவன் முடம்.
Type writer வந்து விட்டது. சொல்லி தர இன்ஸ்டிட்யூட் எல்லா ஊர்களிலும் முளைத்து விட்டது.
Asdfgf ;lkjhj என்று ஆரம்ப பாடம். வயது பெண்களும் பையன்களும் சந்திக்க உதவும் களம் ஆகின.
Telex, fax, printer, computer வரவில்லை. Whatsup, Facebook Twitter கண்டு பிடிக்கவில்லை.
குழந்தைக்கு பால் புகட்ட பாலடை சங்கு, அப்புறம் கெண்டி, அப்புறமா கூஜா.
வேனல் கால குளிர் காத்துக்கு பனை ஓலை விசிறி.
வெட்டுறது பாக்கை, இதுல கலை நயம் வேற.
காரம் மணம் குணம்
நிறைந்த மூக்கு பொடி.
புகையிலை தூள் சுண்ணாம்பு, நெய் போட்டு மர உரலில் அறை அறை ன்னு அரைத்து. கம கம போடாமலே போதை தரும்.
.தரு புறு மோட்டாரு வண்டி. சில கரி எரித்து நீராவியில் கூட ஒடும்.
தராசு, தங்கம் எடை போட, தக்காளி எடைபோட பெரிசா இரும்பில் ஆனது. கோவில் துலா பாரம் கொடுக்கவும் இதுவே. விறகு கட்டை எடை போட.
தவறான நோக்கத்துடன் துலாபாரம் கொடுப்பவர் களை தராசு தலையில் கூட அடிக்கும். சசி தரூர் MP ஐ கேட்டால் சொல்வார். துலபாரம் அண்டை மாநிலங்களில் இன்றும் பிரபலம்.
படி படி, மரக்கால் கால் அறை, முக்கால், ஒண்ணு, இரண்டு, ஆளாக்கு உழக்கு, மாகானி, வீசம், அளவு முறை.
இன்னும் நெறய இருக்கு, மறந்து போனதை நினைவு படுத்த.
பளிச்சுன்னு வழுக்கும் வந்தே பாரத் தொடர் வண்டி.
அன்றைய கரி கக்கும் புகை வண்டி. அபார முன்னேற்றம்.
உலக யுத்தம் முடிந்து பொருளாதாரம் பாள் பட்டு, பாரதம் சுதந்திரம் பெற்ற நாட்களின் சோகம், வட நாட்டில் பஞ்சம். சாரை சாரையாக உணவு, துணி கேட்டு வரும் அகதிகள், அம்மா பிச்சை போடு, அய்யா தர்மம் பண்ணு என்று நாள் முழுவதும் கேட்கும் அவல குரல்கள், கந்தல் துணியில் மக்கள், திருவோடு ஏந்தும் காவி உடை. மறைந்து விட்டன அந்த நாட்கள்.
மாறி விட்டன, இன்னும் மாறும் வரும் காலங்களில்.
வாழ்வோம்.
வாழ நினைத்தால் வாழலாம்,
வழியா இல்லை பூமியில்.
ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது. கோ
No comments:
Post a Comment