Monday, November 6, 2023

இந்தியர் ஒருவர் கூட வசிக்காத நாடுகள்

இந்தியர் ஒருவர் கூட வசிக்காத நாடுகள் என்னென்ன சொல்லுங்க பாப்போம் ?

உலகில் ஒரு சில நாடுகளில் ஒரு இந்தியர் கூட வசிக்கவில்லை என்று ஆய்வில் தகவல் கிடைத்துள்ளது..…. எந்த நாடுகள் என்று பார்ப்போம்…👇

🥀உலகின் பல்வேறு நாடுகளில் செல்வாக்குடன் இந்தியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். உலகின் எந்த மூலைக்கு சென்றாலும், கண்டிப்பாக அங்கு ஒரு இந்தியரையாவது பார்க்க முடியும். ஆசிய நாடுகளில் இருந்து ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா வரை எல்லா நாடுகளிலும் இந்திய மக்களைக் காண முடியும். ஆனால், ஒரு இந்தியர் கூட வாழாத நாடுகளும் இருக்கத் தான் செய்கின்றன. அந்த நாடுகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

🥀உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. உலகில் உள்ள 195 நாடுகளில் பெரும்பாலான நாடுகளில் இந்தியர்கள் வாழ்கின்றனர். அதே போல ஒரு இந்தியர் கூட வாழாத சில நாடுகளும் இருக்கின்றன. அதில் ஒன்று தான் வாடிகன் நகரம்...….

🥀வாடிகன் நகரம் :-

0.44 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் வாடிகன் சிட்டியில் ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றும் மக்கள் வசிக்கின்றனர். இந்த நாட்டின் மக்கள்தொகை மிகவும் குறைவு. ஆனால் மிக ஆச்சரியமான விஷயம் என்னவென்றால். ஒரு இந்தியர் கூட இங்கு வசிக்கவில்லை....

🥀இந்தியாவில் ரோமன் கத்தோலிக்க மதத்தை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் அதிக அளவில் உள்ளனர் என்பது வேறு விஷயம்....

🥀சான் மரினோ :—

ஒரு குடியரசு இதன் மக்கள் தொகை 3 லட்சத்து 35 ஆயிரத்து 620 ஆகும். இருப்பினும், இந்த மக்கள் தொகையில் ஒரு இந்தியர் கூட வசிக்கவில்லை.

இங்கு இந்தியர்கள் என்ற பெயரில் சுற்றுலாப் பயணிகளை மட்டுமே பார்க்க முடியும்....

🥀துவாலு (எல்லிஸ் தீவுகள்) :-

உலகில் எல்லிஸ் தீவுகள் என்று துவாலு அழைக்கப்படுகிறது. இந்த நாடு ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. இந்த நாட்டில் சுமார் 10 ஆயிரம் பேர் வாழ்கின்றனர். இந்த தீவில் 8 கிமீ நீள சாலைகள் மட்டுமே உள்ளன. ஆனால் ஒரு இந்தியர் கூட அங்கு குடியேறவில்லை.

🥀பாகிஸ்தான் :-

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் இந்தியர்கள் யாரும் வசிக்கவில்லை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்றம் மற்றும் பொருளாதார அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தியர்கள் யாரும் இங்கு குடியேறவில்லை. இந்தியாவுக்கு ஒரு நாள் முன்னதாகவே பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது. ஆனால் தூதரக அதிகாரிகள் மற்றும் கைதிகளைத் தவிர, ஒரு இந்தியர் கூட இங்கு வசிக்கவில்லை எனக் கூறப்படுகிறது...

🥀பல்கேரியா : -

தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள பல்கேரியா, 2019 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 69,51,482 மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகிறார்கள். ஆனால் இந்த நாட்டில் இந்திய தூதரக அதிகாரிகளைத் தவிர, எந்த இந்தியரும் குடியேறவில்லை……


நன்றி


No comments:

Post a Comment

KING MAKER !

  ஐம்பது வருடத்துக்கு முன் நடந்த சரித்திரம் தெறியாமல் வந்து விழுந்த கேள்வி ! KING MAKER ! இது தான் பெருந்தலைவரின் பட்டம் ! பழைய காங்கிரஸ் கட...