திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தை நிறுவிய மார்த்தாண்ட வர்மா.
மார்த்தாண்ட வர்மா மட்டும் இல்லை என்றால் இந்தியாவின் (குறைந்த பட்சம் தென் இந்தியாவின்) இணைப்பு மொழியாக ஆங்கிலத்திற்கு பதில் டச்சு மொழி இருந்திருக்கும்.
1498 - போர்த்துகீசியரான வாஸ்கோ டா காமா இந்தியாவை (இன்றைய கேரளா) எட்டியிருந்தாலும், போர்த்துகீசியர்களால் இறுதி வரை இந்தியாவில் பெரிய ராஜ்ஜியத்தை அமைக்க முடியவில்லை.
பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கோலோச்சி இருந்தாலும், ஆங்கிலேயர்களுக்கு முன் இந்திய பெருங்கடலில் டச்சு (நெதர்லாந்து) ஆதிக்கமே இருந்தது.
File:Verwantschapslanden.png - Wikimedia Commons
உலகத்துக்கே அவர்கள் தான் (இந்தோனேசியாவில் இருந்து) கிராம்பையும் ஜாதிக்காயையும் விற்பனை செய்து வந்தார்கள்.
பின்னர் 1638-40 ஆம் ஆண்டு இலங்கையை கைப்பற்றிய (இன்றைய) நெதர்லாந்து, இந்தியாவில் கால் பதிக்க நினைத்தது. இந்தோனேசியா முழுவதையும் ஆட்க்கொண்டதை போல் இந்தியாவின் பெரும் பகுதியை தனது ஆளுமையின் கீழ் கொண்டுவர நினைத்தது. ஆனால் மார்த்தாண்ட வர்மாவினால் நெதர்லாந்தின் கனவில் மண் விழுந்தது.
இன்று நாம் கேரளம் என்று அழைக்கும் பகுதி அன்று பலரின் ஆளுமையின் கீழ் சிதறிக்கிடந்தது, அதனை ஒவ்வொன்றாக மார்த்தாண்ட வர்மா தனது ஆளுமையின் கீழ் கொண்டுவந்தார். இதனால் வெகுண்டெழுந்த ஆளுநர்கள் (குறுநில மன்னர்கள்) இலங்கையில் உள்ள டச்சுன் துணையை நாடினர். ஆளுநர்களின் குரலை கேட்டு குளச்சல் (Colachel) என்ற இடத்துக்கு, தளபதி Eustachius de Lannoy தலைமையில் தனது படைகளை டச்சு அனுப்பி வைத்தது. குளச்சல் போரில் (1741) டச்சு கடற்படை, மீனவர்களின் துணையால், மார்த்தாண்ட வர்மா மகாராஜாவால் தோற்கடிக்கப்பட்டது. டிலென்னாய் (De Lannoy) சரணடைந்தார்.
வெற்றியின் நினைவு சின்னம்
(Creative Commons - Attribution-ShareAlike 4.0 International - CC BY-SA 4.0)
குளச்சலில் டச்சுப்படை சரண்டைந்ததை சித்தரிக்கும் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள ஓவியம்.
சரணடைந்த லென்னாய்-க்கு மார்த்தாண்ட வர்மா தனது படையை நவீனப்படுத்தும் வாய்ப்பை வழங்கினார். வர்மாவின் வாய்ப்பை ஏற்று படைகளை நவீனப்படுத்தியது மட்டுமல்லாமல் கன்னியாகுமரியில் வட்டக்கோட்டையையும் லென்னாய் தனது காலத்தில் வடிவமைத்து கட்டுவதற்கு காரணியாய் இருந்தார்.
பின்னர் லென்னாய் தலைமையில் கொச்சினை திருவிதாங்கூர் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. பிரெஞ்சின் உதவியுடன் போரிட்ட திப்பு சுல்தானின் படையை எதிர்த்து நின்று, திப்புவின் முன்னேற்றத்திற்கு திருவிதாங்கூர் தடையாக இருந்தது.
1777-ஆம் ஆண்டில் இறந்த லன்னோயின் உடல் (இன்றைய) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உதயகிரி கோட்டையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரின் கல்லறையில் லத்தீன் மொழியிலும் தமிழ் மொழியிலும் கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது.
மார்த்தாண்ட வர்மாவின் படை இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்டு, இன்று இந்திய ராணுவத்தில் 9th Battalion Madras Regiment (திருவிதாங்கூர்) என்று அழைக்கப்படுகிறது, இந்திய ராணுவத்தின் இந்த பட்டாள பிரிவு 300 வருடம் பழமையானது.
31 ஜூலை குளச்சல் போரின் ஆண்டுவிழாவாக கடைபிடிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment