Economy redistribution என்ற பெயரில் பெண்களின் தாலியின் தங்கத்தை பறிப்பார்கள் என்ற மோடி பேச்சுக்கு, என் குடும்பம், தாய் எல்லோரும் நாட்டுக்காக மங்கள் சூத்ரா (தாலி) அர்ப்பணித்தவர் என்ற பிரியங்காவின் பேச்சு
இதை ஆரம்பித்து வைத்தது ராகுல் காந்தியின் கோமாளித்தனமான காங்கிரஸ் அறிக்கை!!
அதாவது, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சென்னையில் வீடு வாங்குகிறீர்கள். உங்கள் வீட்டுப் பெண்கள் தங்கத்தை சேர்த்து வைக்கிறார்கள். உங்கள் சொத்து பணம் எல்லாவற்றையும் புடுங்கி, வேலைக்கு போகாமல் டாஸ்மாக் கடைக்கு மட்டும் சென்று வரும் தமிழ்நாட்டு இளைஞர்கள் ( திமுக சீமான் கட்சியில் நிறைய பேர் இருப்பார்கள் ) ஒரு சிலருக்கு ராகுல் காந்தி மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுக்கப் போகிறேன், அதாவது உங்கள் வீட்டில் உள்ள பணத்தை எடுத்து நீங்கள் உழைத்து சேர்த்த பணத்தை எல்லோருக்கும் குறிப்பாக உங்களைச் சுற்றி இருக்கும் 10 பேருக்கு ( அவர்களுக்கு உங்களைக் கண்டால் பிடிக்காது ) கொடுக்கப் போகிறேன் என்று சொல்வது தான், காங்கிரஸ் அறிக்கை!!
இதற்கு முன்பு காங்கிரஸ், ராஜீவ் காந்தி ஆட்சி காலத்திலிருந்து நரசிம்ம ராவ் முதல் மன்மோகன் சிங் வரை அவர்கள் கொண்டு வந்த பொருளாதார மாடல், என்பது ஆஹா ஓஹோ என்று போற்றப்பட்ட ஒரு Economics!! இதற்கு பெயர் மன்மோகன் சிங் எகனாமிக்ஸ் என்று வைத்துக் கொண்டால், இப்போது ராகுல் காந்தி சொல்வதன் பெயர், Robin Hood Economics!!
ராபின் ஹுட் prince of theives ( ராகுல் காந்தி) என்ற இளவரசர், பணக்காரர்களிடம் திருடி ஏழைகளுக்கு கொடுத்த கதையை திரைப்படமாக கூட எடுத்துள்ளார்கள்!!
பெண்களே, உங்கள் தாலியை கூட பறித்து எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்க கிளம்பி விட்டார்கள் காங்கிரஸ்காரர்கள்!! என்று அவர்களுக்கு புரியும்படி நரேந்திர மோடி தேர்தல் கூட்டத்தில் சமீபத்தில் பேசினார்.
இதை இந்த கோமாளித்தனத்தை கண்டித்து பேசிய மோடிக்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று, ராகுல் காந்தியின் அருமைச் சகோதரி பிரியங்கா காந்தி " என் தாய் சோனியா காந்தி நாட்டுக்காக தாலியை தியாகம் செய்தவர்!" என்று போட்டாரே ஒரு போடு! அடுத்து என் குடும்பம் இந்திரா காந்தி நேரு எல்லாம் நாட்டுக்கு தியாகம் செய்தவர்கள் என்று அடுத்து அடுத்து பட்டையை கிளப்புகிறார்கள் காங்கிரஸ்காரர்கள்!
சோனியா காந்தி பற்றி எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் நேரு தியாகம் செய்தாரா ?
இந்திரா காந்தி தியாகம் செய்தாரா? அதுவும் தங்கத்தை தியாகம் செய்தாரா ?
இந்த கேள்விக்கு பதில் சொல்லப் போவது, முன்னாள் ஜெய்ப்பூர் மகாராணி மாதா காயத்ரி தேவி அவர்கள்!!
ஜெய்ப்பூர் ராணி மாதா காயத்ரி தேவி அவர்கள், 1962 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்ற எம்பி யாக பணியாற்றியவர்.
இந்திரா காந்தி எமர்ஜென்சியை கொண்டு வந்து பல பேரை ஜெயிலில் தூக்கி வைத்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். இதில் ஜேபி என்று அழைக்கப்பட்ட ஜெயப்ரகாஷ் நாராயண், அடல் பிகாரி வாஜ்பாய் எல் கே அத்வானி போன்றவர்கள் மட்டுமல்ல இந்த மகாராணி காயத்ரி தேவியும் அடக்கம். தன்னுடைய விரோதிகள் வரிசையில் காயத்ரி பேரையும் சேர்த்து விட்டார் இந்திரா காந்தி.
காரணம் காயத்ரி தேவி அழகு மட்டுமல்ல அறிவு மட்டுமல்ல தன்னைவிட எல்லா விதத்திலும் கொஞ்சம் அதிகமாக இருப்பதாக இந்திரா காந்தி feel செய்ததன் காரணமாக, காயத்ரி தேவியை இந்திரா காந்தி , Glass Doll ஒரு அழகு பொம்மை என்று பாராளுமன்றத்தில் விமர்சனம் செய்தார்!
ஆனால் இங்கே இல்லை பிரியங்கா காந்தியின் தங்கம் பற்றிய தாலி பற்றிய தியாகப் பேச்சு பற்றிய விளக்கம்.
என்னதான் மகாராணியாக இருந்தாலும், காயத்ரி தேவி ஒரு குடும்பப் பெண். அவருக்கும் இவர்கள் சொல்கின்ற மங்கள் சூத்ரா அதாவது தாலி புனிதமானது.
அது மட்டுமல்ல ராஜ பரம்பரை என்பதால் அவர்களிடம் நிறைய தங்கம் உண்டு. இந்திய மகாராஜாக்கள் எல்லோருக்கும் தங்கம் அதிகமாக இருப்பது தெரிந்த கதை. இதில் இஸ்லாமியர்கள் தான் அதிகம்.
ஆனால் இந்திரா காந்தி டார்கெட் செய்தது, ஜெய்ப்பூர் மகாராணி காயத்ரி தேவியை.
ஆம். தங்கத்தை தேடி தங்க வேட்டை ஒன்று ஆடியது அன்றைய மத்திய அரசு. காயத்ரி தேவி ஏதோ தங்கத்தை திருடி வைத்துக் கொண்டது போல், மன்னர் ஆட்சியில் அவர்கள் பரம்பரை வைத்திருந்த தங்கத்தை எடுக்க போகிறேன் என்று சல்லடை போட்டு தேடியது மத்திய அரசு.
இதில் காமெடி என்னவென்றால் அப்போது பாகிஸ்தான் அரசு, இந்த கூத்தில் சேர்ந்து கொண்டது. நேரு குடும்பம் இந்திரா காந்தி குடும்பம் மற்றும் சோனியா காந்தி குடும்பத்திற்கும் பாகிஸ்தானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இது இந்த பிரச்சனையில் வெளியானது.
அப்போது பாகிஸ்தான் பிரதமராக இருந்த பெனசீர் புட்டோ, மகாராணி காயத்ரி தேவியின் தங்கத்தை இந்திய அரசு எடுத்தால், அது இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னாடி இருந்த தங்கம். எனவே அந்தத் தங்கத்தில், அதாவது இந்திய அரசு மகாராணி காயத்ரி தேவி அரண்மனையில் இருந்து எடுக்கும் எல்லா தங்கத்துக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் பங்கு கொடுக்க வேண்டும்.
இது எப்படி இருக்கு?
இன்னும் தங்கம் கண்டுபிடிக்கவில்லை. இந்திய மத்திய அரசு ஒரு குத்து மதிப்பாக தங்கவேட்டை ஒரு தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. எங்கு தேடியும் தங்கம் கிடைக்கவில்லை, அது வேறு விஷயம்.
ஆனால் தங்கம் கிடைப்பதற்குள் வழக்கம் போல் பாகிஸ்தான் துள்ளிக் கொண்டு பங்கு கேட்க வந்துவிட்டது. ஒருவேளை தங்கம் கிடைத்து இருந்தால் , மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு பணத்தை வாரி கொடுத்தது போல், மகாராணி காயத்ரி தேவியின் தங்கத்தை அவர்கள் பாஷையில் தாலியின் தங்கத்தை கூட பாகிஸ்தானுக்கு தூக்கி கொடுத்திருப்பார்கள் காங்கிரஸ்காரர்கள்.
இதைப் பற்றி எல்லாம் பிரியங்கா காந்திக்கு தெரிய நியாயம் இல்லை.
சரி தன் தாயார் சோனியா காந்தி ராஜீவ் காந்தியின் மரணம் மூலம் பெரிய தியாகம் செய்தார் என்று சொல்லும் பிரியங்கா காந்திக்கும் மற்றும் உள்ளூர் காங்கிரஸ் காரர்கள் திமுக காரர்கள் சுப்பிரமணிய சுவாமியை ஜெயலலிதாவை கேள்வி கேட்கும் அத்தனை காங்கிரஸ்காரர்களுக்கும் நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.
ராஜீவ் காந்தி படுகொலை நடந்த இரவு, முக்கியமான காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல, ஜெயலலிதாவும் ஏன் செல்லவில்லை என்று மேதாவித்தனமாக சிலர் கேட்கிறார்கள். அது மட்டும் அல்ல கலைஞர் கருணாநிதி வைகோ போன்றவர்கள் கூட தங்கள் கூட்டத்தை அன்று ஸ்ரீபெரும்புதூரில் ரத்து செய்ததை பிரமாதமாக சுட்டிக் காட்டும் ஒரு சில மேதாவிகள், இந்த முக்கியமான கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.
ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வந்த பொழுது அதற்கு முன்பு பலமுறை தமிழ்நாட்டுக்கு வந்த சோனியா காந்தி, தேர்தல் பிரச்சாரத்தின் போது மட்டும் ஏன் வரவில்லை?
கணவருடன் எங்கும் செல்ல மாட்டார் என்பது உண்மையானால், அவர் பல பல முறை ராஜீவ் காந்தியுடன் கன்னியாகுமரி வரை வந்துள்ளார்.
அடுத்தது சுப்பிரமணிய சுவாமிக்கு தெரியும், என்று வேலுமணி என்று ஒரு நபர் யூட்யூபில் அள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறார்.
சுப்ரமணிய சுவாமி போன்றவர்களுக்கு தெரியும் என்று வைத்துக் கொள்ளலாம். அப்படியானால் சோனியா காந்திக்கும் தெரியும் என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது.
நரசிம்மராவுக்கு நடக்க போகும் விஷயங்கள் எல்லாம் தெரியும். ஆனால் பிரதமராக வேண்டும் என்ற காரணத்திற்காக, ராஜீவ் காந்தி கொலை வழக்கை சரியாக நடத்தவில்லை என்று சொல்லும் சோனியா காந்தி குடும்பம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல மர்மமான கேள்விகளுக்கு ஏன் விடை அளிக்கவில்லை.
பிரியங்கா காந்தி ராகுல் காந்தியை நான் குற்றம் சாட்டவில்லை!! அவர்கள் உண்மையிலேயே சின்ன பிள்ளைகள். அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வர மாட்டார்கள். ஆனால் சோனியா காந்தி ஒன்றும் வெளியே வராத பெண்மணி கிடையாது. ஆனால் அந்த குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டும் சோனியா காந்தி ராஜீவ் காந்தியுடன் இருப்பதை தவிர்த்தது ஏன்? இந்த கேள்வியை எந்த கமிஷனும் கேட்கவில்லை.
நரேந்திர மோடி ஒரு கேள்வி கேட்டதற்கு, இவ்வளவு விஷயங்கள் நான் எழுத வேண்டி உள்ளது. நேரு குடும்பம் மற்றும் சோனியா காந்தி பற்றி பல கேள்விகள் பாஜகவினர் கேட்டால் ஒரு புத்தகமே எழுதலாம்!! அவ்வளவு இருக்கிறது.
சுவையான ட்ரிவியா தகவல் வழக்கம்போல் :
என் தந்தை, 40 வருடங்கள் முன்பு மேட்டூர் பகுதியில் உதவி கலெக்டராக வேலை செய்தார். RDO பொறுப்பிலும் இருந்தார்.
அவர் பணியாற்றிய காலத்தில் தான் வீரப்பனின் சாம்ராஜ்யம் மேட்டூர் வனப்பகுதிகளில் நடந்து கொண்டிருந்தது.
அப்போது தேடுதல் வேட்டை என்ற பெயரில் காவல் அதிகாரிகள் கிராமத்தில் புகுந்து அடாவடி செய்வதோடு இல்லாமல், அந்த கிராமத்து வனப்பகுதியில் உள்ள Tribal women காட்டில் சுள்ளி பொறுக்கி அதை நாட்டுக்கு வந்து சிறுக சிறுக விற்று துளித்துளியாக சேர்த்து சிறிய அளவில் தங்கம் வாங்கி குடிசையில் வைத்திருப்பார்கள்.
அவர்கள் வைத்திருக்கும் அந்த குந்து மணி தங்கத்தை கூட ( மாங்கல்யம் தந்துனானே நா என்றால், அந்த குந்து மணி தங்கம்தான் ) வீரப்பனை தேடுகிறேன் பேர்வழி என்று அங்கே வனத்தில் வாழும் பெண்களை துன்புறுத்தி எடுத்துக் கொண்டு வந்து விடுவார்கள்.
அந்த மலையோரம் கிராமத்து பெண்கள் என் தந்தையிடம் வந்து , "ஐயா, எங்கள் தங்கத்தை வாங்கி தாருங்கள்!" என்று அழுவார்கள்.
என் தந்தை, காவலர்களிடம் பேசி பலமுறை அவர்கள் தங்கத்தை வாங்கி கொடுத்துள்ளதாக சொல்லுவார். இப்படி எல்லாம் அராஜகம் செய்ததால் தான் வீரப்பன் வளர்ந்தான் என்ற விஷயம் நிறைய பேருக்கு தெரியாது.
உண்மையில் வீரப்பன் கொள்ளைக்காரன் கிடையாது. இந்தியாவில் காங்கிரஸ் காரர்கள் தான் மிக மிக பயங்கரமான கொள்ளைக்காரர்கள். அவர்களிடம் உள்ள சொத்தை எல்லோருக்கும் பங்கிட்டு கொடுப்பார்களா? அடுத்தவர் உழைத்த பணத்தை பங்கிட்டு கொடுக்கிறேன் என்பது ஏமாற்று வேலை மட்டுமல்ல, அக்மார்க் அயோக்கியத்தனம்!
பின்குறிப்பு : பேநஜிர் புட்டோ வின் தந்தை தான் அப்பொழுது பிரதமர், ஆனால் புட்டோ இதற்காக முயன்றது உண்மை, இந்த தவறை திருத்தி நேரம் கிடைக்கும் போது விளக்கமாக எழுதுகிறேன். அந்த இடத்தை மட்டும், சரியான தகவல்கள் உடன் பிறகு மாற்றுகிறேன். கொஞ்ச கால அவகாசம் கொடுங்கள். நன்றி - ராஜேஷ் சத்யா!
No comments:
Post a Comment