Thursday, September 5, 2024

Kasi yatrai yatrai


முஸ்லிம்கள் மெக்காவிற்க்கும்
கிருஸ்த்தவர்கள் ஜெருஸலத்திற்க்கும்
இந்துவாக இருந்தால் முன்ணோர் ஆத்மா சாந்தி அடைய 
ராமேஸ்வரம்... காசி.. ராமேஸ்வரம் யாத்திரை மேற்கொள்ளுவது
இந்த பாக்கியம் எனக்கு கிடைத்தது 
முதலில் நாங்கள் பிளான் படி
31 ஜுலை முதல் 2 அக்டோபர் வரை ராமேஸ்வரம் 
 

7 அக்டோபர் முதல் .. 14 அக்டோபர்  வரை காசி கயா பிராக் ராஜ் காசி மற்றும் அயோத்தியா

 இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறேன்

 வாழ்க்கையில் ஒவ்வொருவரும் நினைப்பது


இப்போது ஒவ்வொரு நாளும் நடந்ததை பார்ப்போம்

27அக்டோபர்


காசிக்கு கொண்டு செல்ல 6 வேட்டி 1 9 yard    புடவை மஞ்சள் குங்குமம் வளையல் இவைகளை வாங்கினோம்

31ம்தேதி இரவு எங்கள் டிரெயின் புறப்பட்டு மறுநாள் காலை மண்டபம் அடைந்தோம்

திட்டமிட்டபடி தங்கும் இடம் மற்றும் கார் புக் செய்து விட்டதால்  

எங்கள் கார் தயாராக இருந்தது

வாருங்கள்  .. யாத்திரை தொடங்கலாம்

முதலில் அறை சென்று  குளித்து மடி உடுத்தி எங்கள் வாத்தியார் ( திரு செல்வம் ) அவர்கள் இல்லத்தின் சந்தித்தோம்
அவர் எற்பாடு செய்தபடி தனுஷ்கோடி புறப்பட்டு சென்றோம்
அங்கு தர்பணம் செய்து 


 சக்தி லிங்க பூஜை செய்து

முதலில் சேது லிங்கம்.. இதை தானம் செய்ய வேண்டும்
இரண்டாவது பிந்து லிங்கம்
இதை தனுஷ்கோடி கடலில் கரைக்க வேண்டும்
மூன்றாவது வோணி மாதவர் இதை அலாகாபாத் திருவோணி சங்கமத்தில் கரைக்க வேண்டும்
இங்கு எங்கள் மூதாதையரை நினைத்த்து கடலில் 45 முழுக்கு போட்டு ராமநாத சுவாமி சன்னதி கிளம்பினோம்
வழியில் கோதண்டராமர் கோவில் செனறோம்
இங்கு ராமர் விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்துவைத்தார்


ராமேஸ்வரம் வந்து அக்னி தீர்த்தத்தில் 35 முக்கு போட்டு பின்னர் கோயிலில் உள்ள 27 தீர்த்தத்தில் நீராடினோம்


பின்னர் வாத்தியார் வீட்டுக்கு வந்து பெற்றேருக்கு ஸ்ரார்த்தம் கொடுத்தோம்

மாலை ராமேஸ்வரம  ஸ்வாமியை தரிசித்து 

இரவு டிரெயின் பிடிக்க மண்டபம் புறப்பட்டோம்

2ம் தேதி காலை சென்னை அடைந்தோம்

இனி காசி பயணம் தொடக்கம்

7 அக்டோபர் இரவு இண்டிகோ பிளைட்டில் 


 புறப்பட்டு இரவு சுமார் 11 மணிக்கு வாரணாசி அடைந்தோம் 

அங்கு ஏற்கனவே சங்கர மடத்தில் அறை புக் செய்து உள்ளதால் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை

8 அக்டோபர் காலை 

காலை சுமார் 5மணி அளவில் புறப்பட்டு   prayag 

அங்கு திரு சுந்தரம் வாத்தியார்  (  சங்கர மடம்) சந்தித்தோம்

அங்கு பிராயசித்த சங்கல்பம் 

பின்னர் போட்டில் திரிவோணி சங்கமம் சென்று

மணல் பூஜை

வாபணம் (மொட்டை போடுதல்)

வோணி தானம் (மனைவியின் துணி முடி தானம்)

பின்னர் தம்பதியராக திரு வேணி ஸ்னானம்

ராமேஸ்வரம் கொண்டு செல்ல திரு வேணி நீர் 


பின்னர் சங்கர மடம் வந்து இரண்ய ஸ்ரார்த்தம் செய்து விட்டு

காசி திரும்பி விட்டோம்

9 அக்டோபர்

காலை 6மணிக்கு பிராயசித்த மகா சங்கவ்பம்

பின்னர் அனுமான் காட்டில்  குளித்தல்

(கங்கையில் வெள்ளமாக இருந்ததால்) இல்லை என்றால் போட்டில் போய் மணிகர்ணிகா ஸ்நானம் 

மாலை அனைத்து கோவில் தரிசனம்

கங்கை ஆர்த்தி

10 அக்டோபர்

காலை 6மணிக்கு சாதம் சமைத்த்து ஒரு காட்டிற்க்கு 18 பிண்டம் வீதம் 5 காட்டில் செய்ய வேண்டியதை வெள்ளம் காரணமாக ஒரே இடத்தில் செய்தோம்

பின்னர் சாப்பிட்டு விட்டு கயா புறப்பட்டோம் 


இரவு சுமார் 9மணிக்கு காலை அடைந்தோம்

இரவு சங்கர மடத்தில் தங்கல்


11 அக்டோபர்

இத்தலம் காசி யாத்திரையின் உன்னத மற்றும் முக்கிய  இடமாகும்


கயாவில் பிண்டம் இட்டால் நம் மூதாதையர்கள் மற்றும் உள்ள சத்துக்கள் நண்பர்கள் அனைத்து தெரிந்தவர்கள் மோட்சத்திற்க்கு வழிவகுக்கிறது

முதலில் குளித்து விஷ்ணு பாதம் ஆலையம் சென்று 

முதலில் சங்கல்பம்

இரண்ய தர்ப்பணம் 

பின்னர் 18 பிண்டம் விஷ்ணு பாதத்தில்

18 பிண்டம் பால்குனி நிதியில் கரைத்தால்

பின்னர் ஓமம் வளர்த்து ஸ்ரார்த்தம் 

பின்னர் 63 பிண்டம் அட்சய வட்டத்தில்

இது சிதையிடம் பொய் பேசாத ஆலமரம் இதை சாட்சியாக வைத்து நம் முன்ணேர்க்கு பிண்டம் இடுதல்

இதை முடித்து உணவு சாப்பிட்டு காசி திரும்பினோம்

12  அக்டோபர் 

காலை எழுந்து கங்கையில் குளியல்


பின்னர் தம்பதி பூஜை (தம்பதிகளுக்கு நம் சக்திக்கு எற்ப்ப புடவை வேட்டி திருமாங்கல்யம் மெட்டி மஞ்சள் குங்குமம் கொடுத்து நம் வீட்டு பெண்கள் வளமாக வாழ பிரார்த்தித்து வணங்குதல்



பின்னர் காசி சுற்றி பார்த்தல் 

  Shopping and purchase saree. Annapoorni and ganga water sealing for Rameswaram

Night Stay at Kasi 


13  October

 காலை சுமார் 6 மணிக்கு கிளம்பி அயோத்தியா பயணம்


சுமார் 5 மணி நேர பயணம் 


அயோத்தியா சங்கர மடத்தில் தங்கல்


சுமார் 3 மணிக்கு ராமர் தரிசனம்

பின்னர் அனுமான் கோவில் மற்ற இடங்கள் தரிசனம்

மாலை சரயு ஆர்த்தி தரிசனம்


இரவு சங்கர மடத்தில் ஓய்வு


Kasi yatrai yatrai

காலை 6 மணிக்கு சரயு நதி ஸ்நானம் 

Ayodhya purchase Ramar statue 

  சுமார் 12 மணிக்கு புறப்பட்டூ வாரணாசி ஏர்பஸ் போட்டு அடைதல்

15ம் தேதி காலை சென்னை அடைந்தோம்

27 அக்டோபர்


சென்னையில் இருந்து ராமேஸ்வரம் புறப்படுதல்


28 அக்டோபர்


காலை 7 மணிக்கு ராமநாத சுவாமிக்கு கங்கை தீர்த்தம் அபிஷேகம் 


பின்னர் 5 பிராமணருக்கு சமாராதனை போஜனம்


ராமேஸ்வரத்தில் உள்ள நம்பி அம்மன்.. ராமர் பாதம் தரிசனம்


இரவு சென்னை திரும்பினோம்


இத்துடன் காசி யாத்திரை நிறைவு


இந்த யாத்திரை முழுமை அடைய உதவியவர்கள் அனைவருக்கும் நன்றி




No comments:

Post a Comment

KING MAKER !

  ஐம்பது வருடத்துக்கு முன் நடந்த சரித்திரம் தெறியாமல் வந்து விழுந்த கேள்வி ! KING MAKER ! இது தான் பெருந்தலைவரின் பட்டம் ! பழைய காங்கிரஸ் கட...