இந்திரா சுடப்பட்டதும், விமானம் ஓட்டிக்கிட்டு இருந்த இராஜீவ் காந்தி பிரதமராக்கப்பட்டார் !
ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி முதல்வராக தேர்வு செய்யப்பட்டபோது காங்கிரஸ் கட்சியே
எதிர்பார்க்காத அளவுக்கு சந்திரபாபுவுக்கு டஃப் பைஃட் கொடுத்தார்.
இன்று ரெட்டியின் மகன் முதல்வர் !
லல்லுவின் குடும்பத்தில் 60% பீகார் அரசியலில் பதவி வகுக்கிறார்கள் !
இன்று உ.பி. யில் பி.ஜே.பிக்கு தலைவலியாக இருக்கும் அகிலேஷ் யாதவ் முலாயமின் வாரிசு.
மகாராஷ்டிராவில் பால் தாக்ரே வாரி'சூ'தான்
அந்த மாநில அரசியலில் வி.ஐ.பி !
பட்நாயக் குடும்பம் நல்ல பெயரை சம்பாதித்துள்ளது !
சரி,
தமிழ்நாட்டுக்கு வருவோம் !
அதிமுக ஜெயக்குமாரின் மகன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் !
ஒ.பி.எஸ் மகன் அதிமுக எம்.பி.!
சிதம்பரத்தின் மகன் காங்கிரசில் அசைக்க முடியாத சக்தி !
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் கூட தனக்கு பிறகு தன் குடும்பம் அரசியலுக்கு வராது என்றார்.
இன்று அன்புமணி தான் கட்சிக்கு தலைவர் !
விஜயகாந்த் கட்சி ,குடும்பக்கட்சியாகிவிட்டது!
இதையெல்லாம் விடுங்க _
Non political party திராவிடர் கழகத்தில் வீரமணிக்கு உதவியாக இருப்பது அவரது வாரிசுகள்தான்!
சினிமாவில் இல்லாத வாரிசுகளா!
உதயநிதி அமைச்சரானால் ஏன் குறைத்து மதிப்பிட வேண்டும் !
முரசொலி மாறன்/ ஆற்காடு வீராசாமி / துரைமுருகன் / பொன்முடி / அன்பில் குடும்பம்/ ஆலடி அருணா குடும்பம் / கே.என்.நேரு……..
இவர்களது வாரிசுகள் அரசியலில் கலக்கும் போது உதயநிதி சாதிக்கமாட்டாரா!
சினிமாவில் ரெட் ஜெயண்ட் ஆத்திகம் அதிகம் இருந்தாலும் வியாபாரத்தில் தர்மம் கடைபிடிக்கப்படுகிறது என்று பலரும் ஒப்புக்கொள்கிறார்கள் !
பொன்னியின் செல்வனின் வசூலுக்கு ரெட் ஜெயண்ட் ஒரு காரணம் !
விக்ரம் வெற்றிக்கு உதயநிதியின் ஒத்துழைப்பு முக்கிய காரணம் என்று கமல்ஹாசனுக்கு தெரியும் !
அடுத்தடுத்த வாரிசு !
லவ் டுடே வெற்றி_
இந்தியன் 2 வின் மறு ஆரம்பம்_
உதயநிதி நல்ல பைனான்சியர் என்று பெயரெடுத்துவிட்டார்!
அரசியலிலும் சறுக்கமாட்டார் !
No comments:
Post a Comment